Header

Sri Lanka Army

Defender of the Nation

29th October 2020 17:43:31 Hours

இராணுவத் தலைமையகத்தில் 'கியோஸ்க்' விற்பனை நிலையம் திறந்து வைப்பு

இராணுவத்தினால் வடிவமைக்கப்பட்ட சீருடைகள், சின்னங்கள், காலணிகள், சிவில் உடைகள், வாசனை திரவியங்கள், பதக்கங்கள், ரிப்பன்கள், சாதனங்கள், பிரத்தியேகமாக போர் வீரர்களினால் வடிவமைக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் மற்றும் பிற சுய தயாரிப்பிலான அலங்கார பொருட்கள் உள்ளடங்களான புதிய 'கியோஸ்க்' விற்பனை நிலையமானது, ஸ்ரீ ஜயவர்தனபுரையிலுள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று (29) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. அனைத்து படையினருக்குமான நலன்புரி வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் முகமாக அதன் விற்பனையில் 50 சதவீதம் வரை விலைக் கழிவுடன் குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவுத் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் ஆகியோரின் வேண்டுகோளின் பிரகாரம் , பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவுத் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குறித்த விற்பனை நிலையத்தினை திறந்து வைத்தனர்.

புதிய இராணுவ சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கப்படும் 'கியோஸ்க்' விற்பனை நிலையத்தில் அனைத்து இராணுவ பாகங்கள், தனிப்பட்ட ஆடைகள், உடைகள், பெண்களின் பொருட்கள் மற்றும் புனர்வாழ்வின் கீழ் பெரும்பாலும் ஊனமுற்ற போர் வீரர்களால் தயாரிக்கப்படுகின்ற இயற்கை பொருட்கள், மற்றும் கைவினைப் அலங்கார ஆபரனங்கள் போன்றன விற்பனை செய்யப்படுகிறது.பங்கொல்ல ‘அபிமன்சல -3’ இல் உள்ள காயமடைந்த போர் வீரர்களால் காகித மறுசுழற்சி திட்டத்திலான பெரிய தள்ளுபடியை வழங்குகின்ற தயாரிப்புகளும் இந்த புதிய விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வந்துள்ளன.

மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன, திருமதி குணரத்ன, இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவுத் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ், இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவுத் தலைவி திருமதி சந்திமா உலகெடன்ன, இலங்கை பொலிஸ் சேவா வனிதா பிரிவுத் தலைவி பிரியங்கி விக்ரமரத்ன சிரேஷ்ட சேவா வனிதா உறுப்பினர்கள், லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவ நெல்சன் ஆகியோர் இணைந்து குறித்த விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டதோடு, அவற்றின் உற்பத்தி செயல்முறைகள் குறித்து விசாரித்தனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து குறித்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.Nike air jordan Sneakers | Nike Shoes