Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2020 15:00:58 Hours

மன்னார் படையினரால் கேரள கஞ்சா மீட்பு

வன்னி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழுள்ள மன்னாரினை தளமாக கொண்ட 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால் பீசலாயில் உள்ள ஒலுத்துடுவாய் கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 26.9 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டாரவின் மேற்பார்வையில் வெள்ளிக்கிழமை (23) இரவு மேற்கொள்ளப்பட்ட ஒரு தேடுதல் நடவடிக்கையில் கடற்கரையோரம் புதர்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்க சந்தேகத்திற்கு இடமான குறித்த இருப்பு கண்டெடுக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (25) மற்றொரு நடவடிக்கையில், மன்னார் தலாடியில் வீதி தடை பரிசோதனையில் ஈடுபட்டிருந்த 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 7 ஆவது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவுப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள கொமான்டோ படையணியின் கே-9 மோப்ப நாயினால், தலை மன்னாரிலிருந்து கொழும்பு கொழும்பு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் இருந்து 9 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒத்துழைக்கும் முகமாக படையினர் குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டறியப்பட்ட கேரள கஞ்சா இருப்புகளானது மேலதிக விசாரணைகளுக்காக பெலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.latest Running Sneakers | Nike Shoes