Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2020 17:43:58 Hours

தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உத்திகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய வேண்டும் – நொப்கோ கலந்துரையாடலில் தெரிவிப்பு

கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இன்று (25) காலை நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில், புதிய கொத்தணிகளின் தோற்றம் , அவசரகால நடைமுறைகளைப் பயன்படுத்துதல், முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்புகளை பேணியவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மைய வசதிகள் , வைத்தியசாலைகள் மற்றும் தற்காலிக இடங்களில் நோயாளிகளை நிர்வகித்தல், அவர்களின் அணுகுமுறைகளுக்கு இடையேயான தொடர்புகள், இருக்கும் உத்திகள் மற்றும் அவற்றின் விளைவுகளை மீள் மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

குறித்த கூட்டத்தில் திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ டொக்டர் (செல்வி) சீதா அரம்பேபொல, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, நொப்கோவின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகமான வைத்திய நிபுணர் டொக்டர் எஸ்.ஸ்ரீதரன் மற்றும் இன்னும் சில பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் தொற்றினால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையின் விரைவான அதிகரிப்பு பற்றிய விரிவான விளக்கத்தினை முன்வைத்தார், அதே நேரத்தில் புதிய நோய் கொத்துக்களின் தோற்றம் மற்றும் அதிக தொற்றுக்குள்ளனவர்களின் நடத்தை மாறும் முறைகளை விரிவாக விளக்கினார்.

மாவட்ட மட்டங்களில் மேலும் மேலும் தொற்றுக்குள்ளான தகவல் வெளிவந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மேலாண்மை மற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளின் தனிமைப்படுத்தும் நடைமுறையை பின்பற்றவேண்டும். தொற்றுநோய் மேலும் பரவாமல் தேசிய நோக்கங்களை பெருமளவில் அடைவதற்கு அந்த உத்திகள் ஒன்றோடொன்று செயற்படுத்தப்பட வேண்டும் என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

உளவுத்துறை, சேவை வழங்குநர்களுடன் இணைந்து உண்மையான மட்டத்தில் காணப்படுகின்ற நவீன புதிய முறைகள் மற்றும் மூலோபாய பயன்பாடுகளிலிருந்து சிறந்த முடிவுகளைப் பெறுவதற்காக அதிக பொருத்தமும் முக்கியத்துவமும் உள்ள பகுதிகள் நெருக்கமாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.இது சுகாதார அதிகாரிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். ஆகையால் , முதல் மற்றும் இரண்டாவது தொடர்புகளின் நெருக்கமான மதிப்பீடு, சுய-தனிமைப்படுத்தும் செயல்முறை மற்றும் அத்தகைய தொடர்புகளைக் கண்டறிதல் ஆகியவை ஒரு தொற்றுநோய்க்கு மதிப்பீட்டிற்கு மிகவும் அவசியம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் இதுபோன்ற விவாதங்களின் தேவை மற்றும் அவசரகால தேவைகள் எழும்போது மிகவும் பொருத்தமான மூலோபாய அணுகுமுறைகளைப் பயன்படுத்தல் தொடர்பாக எடுத்துரைத்தனர்

மேற்கண்ட கூட்டத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட சில ஊடக கருத்துகள் பின்வருமாறு:jordan release date | adidas NMD Human Race