Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2020 18:15:52 Hours

நொப்கோ பணிக்குழுவினால் ஊரடங்கு உத்தரவு விதித்தமைக்கான நியாயங்கள் முன்வைப்பு

இன்று பிற்பகல் (23) கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்ற அவசரகால பணிக்குழு அமர்வில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து நெருக்கமாக ஆய்வு செய்த்தோடு, நெரிசலான இயக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள், பொது செயல்பாடுகள் மற்றும் கூட்டங்களை நடத்துதல் மற்றும் சிலரின் பொறுப்பற்ற நடத்தை வழிகள் ஆகியவற்றினால் வைரஸின் பரவல் காணப்படுவதனால் பாதுகாப்பு சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை பணிக்குழு வலியுறுத்தியது.

நெப்கோவின் தலைவரும் பாதுகாப்புப் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தலைமை தாங்கிய பணிக்குழு கூட்டத்தில் குறித்த துறைசார்ந்த அனைத்து உறுப்பினர்களும், நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கொவிட்-19 பரவல் மற்றும் பெலியகொடை மீன் சந்தைக் கொத்துக்களின் தற்போதைய நிலையை விளக்கினார். மக்கள் தொகையின் அதிக அடர்த்தி மற்றும் பெரும்பாலான மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் காணப்படுவதனால் தெமடகொட, மோதரை, வெல்லம்பிட்டி,கொட்டஹென போன்றவற்றில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதித்தமைக்கான நியாயங்கள் முன்வைக்கப்பட்டன. ஏனெனில் அந்த பகுதிகளிலிருந்து அதிகமான தொடர்புப்ட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். முழு தேசத்தின் முன்னேற்றத்திற்கான பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் பகுப்பாய்வு என்ற கருத்தியல் கருத்திற்கு இணங்க தற்போதைய உத்திகளும் நீண்டநேரமாக விவாதிக்கப்பட்டன.

நாட்டில் எந்தவொரு மொத்த ஊரடங்கு உத்தரவுக்கும் செல்ல எந்தவொரு தேவையும் இல்லாததால் மதிப்பீட்டின் மூலம் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், பரவலான வைரஸின் புதிய அச்சுறுத்தல்களை, குறிப்பாக துறைமுகங்களை ஒட்டிய பகுதிகளிலிருந்து அசுசுறுத்தல்கள் காணப்படுவதால் குறித்த ஊரடங்கு உத்தரவு நடைமுறைகள் பரிசீலிக்கப்படலாம். "அடுத்த 24 மணிநேரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் பாதிக்கப்படக்கூடிய காலி, அலுத்கம-பேருவல உள்ளிட்ட துறைமுகங்களிலிருந்து அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. பேலியகொடை கொத்தணியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொற்று நோயாளர்கள் நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ குறித்த பகுதிகளில் தொடர்புளை பேணியதால் அந்த பகுதிகளிலும் அதைச் சுற்றியும் பி.சி.ஆர் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, ”என்று தளபதி கூட்டத்தில் தெரிவித்தார்.

சமூகத்தில் அவர்களின் தேவையற்ற பிரயாணங்களை கட்டுப்படுத்தவும், சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதன் மூலம் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 400 படுக்கைகள் கொண்ட கல்கந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் கொவிட்-19 சிகிச்சை நிலையமாகவும் மாற்றப்படுவதாகவும், அதை இராணுவம் இன்று (23) சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார். சிறந்த சுகாதாரப் பழக்கவழக்கங்களுடன் தொடர்ச்சியான விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் சுகாதார ஊழியர்களிடையே வைரஸ் தொற்று அபாயத்தை வெகுவாகக் குறைக்கும் என்று தளபதி குறிப்பிட்டார். Buy Kicks | New Balance 991 Footwear