Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2020 14:22:55 Hours

தென்னக மக்களின் நிதியுதவியில் படையினர் முன்னாள் புலி பெண் போராளிக்கும் மற்றுமொரு வறிய குடும்பத்திக்கும் புதிய வீடுகள் அன்பளிப்பு

யாழ் பாதுகாப்புப் படை தலைமையகம் அலவை விதவை பெண்னான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளி மீதும் வள்ளிபுரம் பிரதேசத்தில் வறுமையில் வாடும் பெண்ணுக்கும் தங்கள் மகத்துவமான மனிதாபிமான செயற்பாடுகளை விரிவுபடுத்தியது. தெற்கின் புகழ்பெற்ற வங்கியாளரும் மாஸ்டர்கார்டு சர்வதேச தெற்காசியாவின் முன்னாள் பிரதி தலைவரும் வணிக முகாமையாளருமான திரு குமார் வீரசூரிய மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களின் நிதி உதவி மூலம் வீடற்றோருக்கான வீடுகளை யாழ்ப்பாண படையினரின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (19) இடம்பெற்றது.

கட்டுமானப் பணிகளுக்கான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தினை 55வது படைப்பிரிவின் 551வது பிரிகேட்டின் 4வது சிங்கப் படை மற்றும் 16 வது இலங்கை இலேசாயுத காலாட் படை படையினரால் வழங்கப்பட்டது. 55வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலாப்பிட்டியவின் மற்றும் 551வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் நடைப்பெற்ற. தொடக்க விழாவில் யாழ் பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயனாளிகளான முன்னாள் புலி போராளியும் இரு பிள்ளைகளின் தாயும் வறுமையில் வாடும் விதவையுமான திருமதி கே. சுதாகர் மற்றும் திருமதி எஸ்.ரஞ்சன் நந்தானி ஆகியோரது பெயர்கள் அவரகள் வாழும் பிரதேசங்களின் கிராம சேவையாளரினால் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

நன்கொடையாளர் திரு வீரசூரிய படையினரின் நிபுணத்துவம் மீதான நம்பிக்கையின் பேரில் இந்த மனிதாபிமான செயற்பாடாக இரு வீடுகள் கட்டுவதற்கான மூலப்பொருட்களை படையினருக்கு வழங்கியிருந்தார். விழாவின் போது நன்கொடையாளர் மற்றும் படையினர் கூட்டாக வீட்டு உபகரணங்கள் மற்றும் இரு வீடுகளுக்கும் தேவையான பல பொருட்களை பரிசளித்தனர்.

மத பிரமுகர்கள், மேலதிக பிரதேச செயலாளர் - கரவெட்டி, 55வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலாப்பிட்டிய, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , யாழ் பாதுகாப்பு படை பிரிகேடியர் பொது பணிநிலை பிரிகேடியர் பிரசன்ன ரணவக, 551வது பிரிகேட் தளபதி மற்றும் 55வது படைப்பிரிவின் ஏனைய பிரிகேட் தளபதிகள் , 4வது சிங்க படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சுஜீவ தசநாயக்க, 16 வது இலங்கை இலேசாயுத காலாட்படை கட்டளை அதிகாரி மேஜர் தீக்ஷன ரத்நாயக்க, அரசு அதிகாரிகள், நலன் விரும்பிகள் மற்றும் படையினர் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நிகழ்வில் பங்கேற்றனர். best Running shoes brand | nike fashion