Header

Sri Lanka Army

Defender of the Nation

15th October 2020 05:31:51 Hours

இலங்கை யுனிபபல் படையினருடன் APC கள் மற்றும் MPMG ஆயுதங்களுடன் கூட்டுப் பயிற்சி

லெபனான் ஐக்கிய நாட்டு படையில் (யுனிபபல்) பணியாற்றும் இலங்கை பாதுகாப்பு படை நிறுவனத்துடன் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கானா, தென் கொரியா, மலேசியா , நேபாளம், இந்தியா, இந்தோனேசியா, செர்பியா, பிரேசில், பங்களாதேஷ், சீனா, போலந்து, மற்றும் லெபனான் ஆயுதப்படைகள் சமீபத்தில் 'எக்ஸ்-ஸ்டீல் சியோர்ம் - 2020' என்ற ஐந்து நாள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் பங்கேற்றன.

இப் பயிற்சியில் 3 அதிகாரிகள் மற்றும் 27 ஏனைய அணிகளைக் கொண்ட இலங்கை அமைதி காக்கும் குழு இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட நான்கு கவச படையினர் (ஏபிசி), ஐந்து பல்நோக்கு இயந்திர துப்பாக்கிகள் (எம்.பி.எம்.ஜி) மற்றும் பத்து தனிப்பட்ட ஆயுதங்களை இந்த கூட்டுப் பயிற்சியின் போது பயன்படுத்தியது, இது தனிப்பட்ட துப்பாக்கிச் சூட்டை மேம்படுத்துவதற்கும் பயிற்றுவிப்பாதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயுத அமைப்புகள், வரம்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளில் திறன், யுனிபபல் மற்றும் லெபனான் ஆயுதப்படைகளின் ஆயுத அமைப்புகளின் சேவை திறன், பொருத்தமான ஒருங்கிணைப்பு பொறிமுறை மற்றும் யுனிபபல் மற்றும் லெபனான் ஆயுதப்படைகளுக்கு இடையில் தேவையான தொடர்பு நடைமுறைகளை நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றில் திறன்கள் மற்றும் நம்பிக்கையின் மேம்படுத்திகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட்டுள்ளது.

பிரதம விருந்தினராக மிஷன் மற்றும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டெல் கோல் பயிற்சி அளித்தார். பிரதிப் படைத் தளபதி, சிரேஸ்ட லெபனான் இராணுவ அதிகாரிகள் மற்றும் யுனிஃபல் இராணுவ பிரதிநிதிகள் ஆகியோர் அன்றைய பயிற்சி நடவடிக்கைகளை கவனித்தனர். நிகழ்வில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றப்பட்டது.

இப்பயிற்சி தெற்கு லெபனானின் நக்குராவின் யுனிபபல் தலைமையகத்தின் பாதுகாப்பு கடமைகளுக்காக இலங்கை அமைதி காக்கும் குழு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கு படையினர் பங்களிக்கும் நாடுகளில் இலங்கை ஐ.நா அமைதிக்காக தனது படையினரை 2004 முதல் பெரிய குழுக்களாக அனுப்பும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

தற்போது இலங்கை படையினர் பெரும்பான்மையானவர்கள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் லெபனான் (UNIFIL), தென் சூடான் (UNMISS), மாலி (MINUSMA), அபேய் (UNISFA), நியூயோர்க் (UNHQ), மத்திய ஆப்பிரிக்க குடியரசு (MINUSCA) மற்றும் மேற்கு சஹாரா (MINURSO), இராணுவ கண்காணிப்பாளர்கள், பதவி நிலை அதிகாரிகள், பதவி நிலை அதிகாரி உதவியாளர்கள் அல்லது பொது படைப் பிரிவுகளாக பணியாற்றுகின்றனர். Authentic Nike Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!