Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2020 08:14:47 Hours

தொற்று நோயாளர்களை அனுமதிக்க வடக்கு இராணுவ வைத்திசாலை தயார் நிலையில்- நொப்கோ தலைவர் தெரிவிப்பு

செவ்வாய்க்கிழமை 13ஆம் திகதி பிற்பகல், கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பணிக்குழு உறுப்பினர்களின் அமர்வானது, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (டொக்டர்) சஞ்சீவ முனசிங்க,நொப்கோவின் தலைவரும், பாதுகாப்புத் தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதாரத் துறையின் ஏனைய முக்கிய பங்குதாரர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

நொப்கோவின் தலைவர் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று தற்போதைய முன்னேற்றங்களை விளக்கினார். மினுவாங்கொடையில் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 80% மான நபர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார், மேலும்தொற்று நோய்க்குள்ளானர்களின் முதல் தொடர்புகள் மற்றும் இரண்டாவது தொடர்புகளை பேணிய நபர்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு குறிப்பிட்ட இடங்களில் அல்லது அவர்களது வீடுகளில், படையினர் அந்த பகுதிகளில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த அமர்வில் இந்த வாரம் இறுதி வரை தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என இனக்கப்பாடு ஏற்பட்டது. உளவுத்துறையின் அறிக்கையின் படி செப்டம்பர் 10-20 க்கு இடையில் 1 ஆவது தொற்றுநோயாளர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் வைத்தியசாலைகளின் திறன்கள் மற்றும் மாவட்ட மட்டங்களில் வைத்தியசாலைகளின் ஒதுக்கீடுகள் தொர்பாக மீண்டும் பரிசீலிக்கப்பட்டன. மேலும் வடக்கில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அங்குள்ள நோயாளிகளை மேலும் அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்க சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் அவர்கள் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஒத்துழைப்பினை கேட்டுக் கொண்டார்.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த நொப்கோவின் தலைவர் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வ அவர்கள் வடக்கில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 100 படுக்கை வசதிகளை வழங்க இராணுவம் தயாராக இருக்கும் என்றும் தேவையான ஏனைய வசதிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் கிடைக்கக்கூடும் வகையில் ஏற்பாடு செய்யும் என்றும் கூட்டத்தில் தெரிவித்தார். jordan Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov