Header

Sri Lanka Army

Defender of the Nation

12th October 2020 08:56:27 Hours

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக கொவிட் தடுப்பு செயலணியில் கலந்துரையாடல்

கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர அவர்களின் தலைமையில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில், சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்கள் இணைந்து தற்போதைய கொவிட் -19 தடுப்பு செயல்திட்டம், கிராம மட்டங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் திறன் மேம்பாடு, புதிய மூலோபாய அணுகுமுறைகளைப் பயன்படுத்துதல், அவசர தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் அதிக அளவிலான நபர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான தயார்நிலை, பி.சி.ஆர் சோதனை முடிவுகளின் தாமதத்தை குறைத்தல், பொலிஸ் பிரிவு மட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் புதிய தொற்று நோயில் இருந்து மீள் எழுதல் தொடர்பான விவிரங்களை கலந்துரையாடினர்.

இந்த நோய் தொற்று தோன்றியதை அடுத்து அனைத்து மட்டங்களிலும் உள்ள அனைத்து மூலோபாய செயல்பாட்டு வழிமுறைகளையும் மீண்டும் பார்வையிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இலங்கை இராணுவ வைத்தியசாலை ஆய்வகம் திறன் கொண்டதாக இருப்பதால் பி.சி.ஆர் சோதனைகளை விரைவுபடுத்தவும் மேலும் மையப்படுத்தவும் பரிந்துரைத்தார். ஹோட்டல், சமூக நபர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பி.சி.ஆர் சோதனைகளை நடத்துதல், இதன் மூலம் அத்தகைய சோதனைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று வழியுறுத்தினார்.

மேலும் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு பணிக்குழுவின் உறுப்பினர்கள் தொற்றாளர்கள் இனங்காணலின் அடிப்படையில் பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை விதிப்பது மற்றும் மேலும் மேலும் கொத்துகள் கண்டறியப்படும் போது மிகவும் பயனுள்ள சிறந்த நடைமுறைகள் மினுவாஙகொடை மற்றும் கம்பாஹா பகுதிகளில் சுய தனிமைப்படுத்தலில் வேகமாக அதிகரித்து வருவதால் அதன் பொருட்டு தேவையான தனிமைப்படுத்தல் மையங்கள் உருவாக்க நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் கொவிட்-19 நோயாளர்களை அனுமதிக்க நாடுபூராகவுள்ள 800 வைத்தியசாலைகளைத் தவிர்த்து 148 வைத்தியசலைகளில் சுமார் 3000 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பணிக்குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தனர். சட்ட அமுலாக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான விழிப்புணர்வு நகர்வுகளுடன் பொது மக்களிடையே கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர்.

அத்தோடு அரசினால் வழங்கப்படும் தகவல்களை மட்டும் பொது மக்களை நம்புமாறு வழியுறுத்தி ஒலி பதிவுகள் வெளியிடல் மற்றும் திரிவுப்படுத்தி பொய் தகவல்களை பரப்பும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் செயலணி தலைவரால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இக் குரல் பதிவு வெளியிடப்பட்ட நேரத்தில் மினுவாங்கொடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய 39 கொவிட்-19 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளர். அவர்களில் 25 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டனர், மேலும் 14 பேர் அந்த தொழிற்சாலை தொழிலாளர்களின் நெருங்கிய தொடர்புடையவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்கள். அதன்படி, மினுவாங்கொடை தொழிற்சாலை கொத்தணியில் இதுவரை 1346 தொற்றாளர்கள் கொவிட் தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர், தொற்றுக்குள்ளான தொழிற்சாலை ஊழியர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சையில் பெற்று வருகின்றதுடன் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ள ஏனைய நபர்கள் இன்னும் நோய் தொற்றுள்ளவர்கள் என உறுதிப்படுத்தப்படவில்லை. அத்துடன் தொழிற்சாலை நோய் தொற்றுக்குள்ளானவர்களை தவிர வேறு அடையாளம் காணப்பட்ட நோய்தொற்றாளர்கள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களில் 90 சத வீதமானவர்கள் முப்படையின் தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளனர். அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஏனைய அனைத்து குடும்பங்களையும் தனிமைப்படுத்த எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டார்.

"நேற்றுமுன்தினம் ஒரு நாளைக்கு மன்னாரில் சில கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட நபர்களை இனங்கண்டோம். பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்புகளை அடையாளம் காணப்பட்டதனால் பட்டித்தோட்டம் மற்றும் பெரியக்காடு கிராமங்களை உடனடியாக தனிமைப்படுத்தினோம். எவ்வாறாயினும் தேவையான நடவடிக்கைகளின் பின்னர் இன்று மாலை அந்த இரண்டு கிராமங்களின் தனிமைப்படுதலில் இருந்து தளர்த்தியுள்ளோம். மினுவாங்கொடை கொரோனா கொத்தனி காரணமாக நாங்கள் அந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை விதித்தோம், ஆனால் கடந்த 4 நாட்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் உணவு நிலையங்களை பொதுமக்களுக்கு திறந்து வைத்தோம். எவ்வாறாயினும், மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை (15) வரையான அடுத்த மூன்று நாட்களுக்கு குறுத் நிலையங்களை முற்றாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அறிக்கையின் காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது: Nike air jordan Sneakers | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify