Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2020 15:09:51 Hours

பட்டதாரி பயிற்சி பாடநெறி கட்டம் -1 நிறைவு

புதிதாக அரச சேவைக்கு இணைக்கப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்காக இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட தலைமைத்துவம் மற்றும் ஊக்கப்படுத்தல் பயிற்சித் திட்டம் ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டுகின்றது. 10,000 பட்டதாரிகளுக்கான முதல் கட்டம் சனிக்கிழமை 03 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 51 இராணுவ மையங்களில் பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படைப்பிரிவு தலைமையகங்களில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த திட்டமானது பாதுகாப்புப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது.

விரிவுரைகள், கலந்துரையாடல்கள், வெளிக்கள பயிற்சி நடவடிக்கைகள், குழு உருவாக்கும் நடவடிக்கைகள், ஆய்வு சுற்றுப்பயணங்கள், திறன் ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் சுயாதீனமான ஒன்றோடொன்று தொடர்புடைய தொகுதிக்கூறுகளின் கீழ் தொடங்கப்பட்ட இப் பயிற்ச்சியானது தலைமைத்துவம் மற்றும் ஊக்குவிப்பு திட்டம் பொதுத்துறையில் உயர் பங்களிப்பை ஊற்படுத்த உற்சாகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவ பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சகம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரச மற்றும் தனியார் துறைகள் இந்த திட்டத்துடன் நெருக்கமாக செயல்படுகின்றன. இராணுவ தலைமையகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்துடனான கருத்திற்கமைவாக மூலோபாய வழிகாட்டுதல்களைப் உருவாக்கி அந்த ஐந்து மாதங்களில் இந்த பட்டதாரி பயிற்சி திட்டத்தின். பயிற்சிகளை இராணுவத் தலைமையகத்தின் பயிற்சி பணிப்பகத்தினால் பல்வேறு மட்டங்களில் அனைத்து பங்குதாரர்களுடன் முன்னெடுக்கின்றது..

முதலாம் கட்டத்தின் போது, 8554 பட்டதாரிகள் நாடு முழுவதும் உள்ள 51 பயிற்சி மையங்களில் 250 ஆண்களும் 2300 பெண்களும் பங்குபற்றினர். அவர்கள் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் (200 பெண் தமிழ் பட்டதாரிகள்), வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் (2550 பட்டதாரிகள்) 250 ஆண்கள், 2300 பெண்கள் உட்பட பயிற்சியைப் பின்பற்றினர். மேலும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மதகுருமார்கள் பயிற்சியைப் பின்பற்றினர். மேலும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் (2720 பட்டதாரிகள்) 1160 ஆண்கள் மற்றும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த 1560 பெண்கள் உட்பட.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் (277 தமிழ் பட்டதாரிகள்) 131 ஆண்களுக்கும் 146 பெண்களுக்கும் பயிற்சி அளித்தனர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் 131 பட்டதாரிகள் (62 ஆண்கள் 34 பெண்கள்) இருந்தனர். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் 3226 பட்டதாரிகள் (345 ஆண்கள் மற்றும் 2891 பெண்கள்) இருந்தனர். மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் 191 ஆண்கள் மற்றும் அனைத்து இனத்தைச் சேர்ந்த 752 பெண்கள் உட்பட 943 பட்டதாரிகள் பயிற்சி பெற்றனர். அவர்களில் உடல் அங்கவின முற்றோர் மற்றும் கர்ப்பிணி மற்றும் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர்.

இந்த கட்டம் 1 இன் நிறைவு நிகழ்வில் பாதுகாப்பு படைத் தளபதிகள், அந்தந்த பயிற்சி நிறுவனங்களின் தளபதிகள் கலந்து கொண்டனர், அங்கு பட்டதாரிகளுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்குவதற்கு முன்பு கலாசார மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் அரங்கேற்றின Running sports | adidas poccnr jumper dress pants size