Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd July 2020 17:48:16 Hours

குவெட்டா பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் விருது வழங்கள்

குவெட்டாவில் உள்ள பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு சின்னங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று (22) ஆம் திகதி சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை பதவிநிலை கட்டளை கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் 1960 – 2005 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்புகளை நிறைவு செய்த இலங்கை இராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 37 ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலுள்ள அதிகாரிகளுக்கு இந்த நூற்றாண்டை முன்னிட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முகமட் சாத் கட்டக், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் , இராணுவ, விமானப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முகமட்ட சாட் கட்டக் அவர்களை பாதுகாப்பு பதவிநிலை கட்டளை மற்றும் கல்லூரியின் கட்டளை தளபதி அவர்கள் வரவேற்றார். இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் முதல் அங்கமாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை தேசிய கீதங்கள் இசைத்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரியான கேர்ணல் சஜாட் அலி அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தி நிகழ்வுகள் ஆரம்பமானது.

பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியில் பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பி.எஸ்.சி பாடநெறிகளை பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியில் 1960- 2005 காலப்பகுதிகளில் நிறைவு செய்த பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன , மேஜர் ஜெனரல் ஜகத் குணரத்ன அவர்களுக்கு பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரினால் சின்னங்கள் அனிவித்து வைக்கப்பட்டன.

சுருக்கமான பதக்கம் வழங்கும் விழாவில் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் பாக்கிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலைத்திருக்கும் நட்புரீதியான உறவுகளைப் பாராட்டினார், மேலும் அனைத்து துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக மேலும் நெருக்கமாக பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பித்தார். பாகிஸ்தான் உயர் ஸ்தானிகாராலயத்தின் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து உரையாற்றிய போது இந்த நிகழ்வை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றிகளை தெரிவித்தார். கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் நூற்றாண்டு நிகழ்வினை நடாத்தியமைக்காக பாதுகாப்பு செயாலாளர் தனது ஆழ்ந்த நன்றியை உயர்ஸ்தானிகருக்கு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குழுப்புகைப்படம் எடுக்கப்பட்டு நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன. பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரினால் குறித்த நிகழ்வில் இணைந்து கொண்ட பிரதம விருந்தினரான பாதுகாப்பு செயலாளர் , பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டின்ன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் விமானப் படைத் தளபதி எயார் மாஷல் சுமங்கல டயஸ் ஆகியோருக்கு விஷேட நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நன்றியுறையை ஆற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியின் சேவைகள் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கான அதன் பயிற்சி தொடர்பாக நினைவுகூர்ந்த்தோடு, அவர் இந்த நூற்றாண்டு நிகழ்வினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்காக பாரிய ஒத்துழைப்பை வழங்கி பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி மற்றும் விமானப்படை தளபதி அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை இந்த நிகழ்வினூடாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரி உலகெங்கிலும் உள்ள பல புகழ்பெற்ற அதிகாரிகளை கொண்டுள்ளது. பீல்ட் மார்ஷல் வாவெல், மொன்டோஹொமரி, ஆச்சின்லெக் மற்றும் ஸ்லீம் (ஐஇ) , ப்ளார்னி (அவுஸ்திரேலியா), ஆயுப் ஹான் (பாகிஸ்தான்) மற்றும் மனேக்ஷா (இந்தியா) போன்ற பதவி நிலை கல்லூரியில் சிறப்பு தேர்ச்சிகளை பெற்றுள்ளனர்.

குவெட்டாவில் உள்ள கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியானது பாக்கிஸ்தான் இராணுவத்தின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகும். jordan Sneakers | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos