Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2020 06:41:59 Hours

தென் சூடானில் உள்ள யுஎன்மிசனின் இலங்கை மருத்துவ குழுவின் உயிர் காக்கும் சேவைக்கு பாராட்டு

அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்று நோய் மற்றும் ஏனைய சவால்கள் இருந்தபோதிலும் தென் சூடான் மக்களுக்கு உதவும் நோக்கில், தென் சூடானில் உள்ள போர் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையுடன் (UNMISS) இணைந்து பணியாற்றும் இலங்கை மருத்துவ குழுவினர் (SRIMED) , சமீபத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஜோங்லீ மற்றும் ஏரிகள் பகுதிகளில் இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பலத்த காயமடைந்த தென் சூடானிய ஆண்களுக்கு மருத்துவ சேவையினை வழங்கினர்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மார்பில் காயம் ஏற்பட்டதோடு, மற்றுமொருவருக்கு தலையில் சுடுபட்டதால் அவர்களுக்கான அவசர சிகிச்சையை வழங்க தேவையான எக்ஸ்ரே வசதிகள் மற்றும் பிற உபகரணங்கள் வசதிகள் போர் அரச மருத்துவமனையில் இல்லாத காரணமாக அத்தகைய குறித்த இரண்டு நிகழ்வுகளின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு இலங்கை மருத்துவக் குழு அவர்களுக்கான சிகிச்சையினை வழங்கியது.

"யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ். மருத்துவ பணியாளர்கள் இந்த இரண்டு பேருக்கும் அவசரமாகத் தேவையான பராமரிப்பை வழங்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம்," என்று போர் அரச மருத்துவமனையின் தலைமை செவிலியர் அயுவேல் வூர் தெரிவித்தார். "உள்ளூர் சமூகங்கள் மற்றும் எங்கள் சீருடை மற்றும் பொதுமக்கள் பணியாளர்களிடையே கொவிட்-19 பரவுவதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் அமைத் காக்கும் படையினர் ஒவ்வொரு முன்னெச்சரிக்கையையும் எடுத்து வருகையில், நாங்கள் தொடர்ந்து உயிர் காக்கும் மற்றும் முக்கியமான பணிகளைச் செய்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் நாங்கள் இங்கு வந்துள்ளோம், ”என்று போரில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் அலுவலகத்தின் தலைவர் டெபோரா ஷெய்ன் கூறினார், அவர்கள் இருவரும் மேற்கோள் காட்டப்பட்டனர்.

இரு நோயாளிகளுக்கும் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. 2014 முதல், போரில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் நிலை II மருத்துவமனையில் 15,000 இற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டள்ளன. மேலும் 2,700 எக்ஸ்ரேக்கள் மற்றும் சுமார் 300 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிள்ளன. மாக் சாமுவேல் அவர்களினால் SRIMED மருத்துவமனையினால் உள்ளூர் சமூகங்களுக்கு வழங்கப்படும் மருத்துவ பராமரிப்பு தொடர்பாக யுஎன்மிசன் வெப்தளத்தில் 2020 மே 14 ஆம் திகதி எழுதிய குறிப்பில் ‘அதிகரித்து வரும் கொவிட் -19 வைரஸ் மத்தியில் அமைதி காக்கும் படையினர் அதன் பணிகளைத் தொடர்வதற்கான சவால்கள் இருந்தபோதிலும் பொதுமக்களைப் பாதுகாத்தல் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட நாட்டின் அமைதியைக் கட்டியெழுப்புதல் முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தென் சூடான் மக்களுக்கு, சுகாதார சேவையை வழங்குவதில், UNMISS தனது கட்டளைக்கு அப்பால் செல்வதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது. Running Sneakers | adidas garwen spezial white shoes - New In Shoes for Men