Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2020 04:23:27 Hours

இலங்கையின் வெற்றிகரமான முயற்சிகள் தொடர்பாக கோவிட் மைய தலைவருடன் பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்துரையாடல்.

இலங்கையில் கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோவிட் – 19 தேசிய தடுப்பு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை எட்டு வெளிநாட்டு பாதுகாப்பு இணைப்பதிகாரிகள் இம் மாதம் (16) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது பங்களாதேசத்தின் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையத் எம். ஹக்கீம், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவ், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ஆர்.எஸ். மிஸ்ரா, கெப்டன் ககு புக அயூரா, பாதுகாப்பு / பாதுகாப்பு இணைப்பதிகாரி, ஜப்பான் தூதரகம், மாலத்தீவு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் இஸ்மாயில் நசீர், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் சஜ்ஜாத் அலி, கேர்னல் டெனிஸ் I. ஷ்கோடா, இராணுவ விமானம் மற்றும் கடற்படை இணைப்பு, ரஷ்ய கூட்டமைப்பின் தூதரக அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் டிராவிஸ் ரே காக்ஸ், பாதுகாப்பு மற்றும் இராணுவ இணைப்பு, அமெரிக்காவின் தூதரகம், சிரேஷ்ட கேர்னல் வான் டோங், சீன மக்கள் குடியரசின் தூதரகத்தில் (பி.ஆர்.சி) இராணுவ இணைப்பு மற்றும் லெப்டினன்ட் கேணல் சாங் கியான்ஜின், போன்றோர் இராணுவ தளபதியை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடலின் போது, இலங்கை பாதுகாப்பு படையினர்கள் மேற்கொண்டு நிறைவேற்றிய தேசிய பணிகள், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் பராமரிப்பு, சர்வதேச தாக்கம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இராணுவ தளபதியவர்கள் கடும் தாமதங்களுக்கு மத்தியில் இருந்த போதிலும் இந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதையிட்டு இராணுவ தளபதியவர்கள் இவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதியவர்கள் சுகாதார அதிகாரிகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். .

இலங்கையில் கோவிட் எதிர் தாக்கத்தின்போது எமது நட்பு நாடுகள் வழங்கிய ஆதரவையிட்டு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து இலங்கையின் மேன்மை தங்கிய ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், சுகாதார பணிப்பாளர் நாயகம் அவர்களின் சார்பாகவும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வெளியுறவு அமைச்சின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டன. இச்சந்திப்பின் போது இராணுவ நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, பயிற்சி பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத், நோப்கோவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பாளர் கேர்னல் விபுல சந்திரசிரி ஆகியோர் கலந்து கொண்டனர். Adidas footwear | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ