Header

Sri Lanka Army

Defender of the Nation

29th May 2020 11:10:32 Hours

விமான நிலையத்தில் சேவையாற்றும் முப்படையினருக்கு உடனடி பிசீஆர் பரிசோதனை

பாதுகாப்புப் தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் நாட்டின் கொவிட் 19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படையினால் நிர்வகிக்கப்படும் ஐ.டி.யூ.எம்-தியகம (158), விளையாட்டு வளாகம் - தியகம (01), புனானை (18), குண்டசாலை 32 மற்றும் பல்லேகலை (14) தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் நிறைவடைந்த மொத்தம் 233 பேர் பி.சி.ஆர் சோதனைகளின் பின்னர் இன்று (31) தனிமைப்படுத்தல் சான்றிதழ் வழங்கி தங்கள் வீடுகளுக்கு விடுவிக்கப்படவுள்ளனர். இன்றுவரை (31) முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்கங்களில் இருந்து மொத்தம் 11,252 தனிமைப்படுத்தப்பட்டு வெளியேறியுள்ளனர்.

இன்று 31ம் திகதி வரை முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்கங்களில் இருந்து மொத்தம் 11,483 தனிமைப்படுத்தப்பட்டு வெளியேறியுள்ளனர். தற்போது முப்படையினரால் நடாத்தப்படும் 46 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,087 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இராணுவ லெப்டிணன் கேர்ணல் ஒருவருக்குதொற்று உறுதிச்செய்யப்பட்டு முள்ளேரியாவை ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் சேவையாற்றும் முப்படையினை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக பி சீ ஆர் பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

750 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி உள்ளனர். கடந்த 24 மணித்தியாலயங்களில் மட்டும் 25 கடற்படை வீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 403 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 347 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். latest jordans | Klær Nike