Header

Sri Lanka Army

Defender of the Nation

21st May 2020 21:13:36 Hours

‘சேம் சேம்’ சமூகம் சார்ந்த உள்ளூர் அமைப்பினால் இராணுவத்தினருக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

‘தெஹிவலையில் அமைந்துள்ள ‘சேம் சேம்’ சமூகம் சார்ந்த உள்ளூர் அமைப்பினால் முப்படையினரால் நாடாளவியல் ரீதியாக பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இராணுவத்தினர் ஆற்றி வரும் சேவையை கௌரவிக்கும் முகமாக இராணுவத்தினருக்கு 150 உலருணவு பொதிகள் இந்த அமைப்பினால் கோவிட் மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் இன்று (21) ஆம் திகதி மாலை கையளிக்கப்பட்டன.

‘இந்த முஸ்லீம் சமூக நிதியுதவி கொண்ட சமூக மேம்பாட்டு அமைப்பானது ‘மதத்திற்கு அப்பாற்பட்ட மனிதநேயம்’, எனும் தொணிப் பொருளின் கீழ் ரமலான் பண்டிகை மாத காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஒரு மில்லியன் மதிப்புமிக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அதன் பிரகாரம் இம்முறை பாதுகாப்பு படையினர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மனிதாபிமான ரீதியாக ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் முகமாக இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

‘‘சேம் சேம்’ அறக்கட்டளை சமூக அமைப்பின் தலைவரான திரு யூசுப் ஹனிபா அவர்கள் இந்த நன்கொடை பொதிகளை இராணுவ தளபதியிடம் கையளித்தார். short url link | Nike