Header

Sri Lanka Army

Defender of the Nation

21st May 2020 06:38:24 Hours

சுகாதார விதிகளை சட்டப்பூர்வமாக்குதலின் சாத்தியங்கள் தொடர்பான கலந்துரையாடல்

ஜனாதிபதி செயலணி (PTF), (NOCPCO)), சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ திருமதி பவித்ரா வன்னியார்ச்சி மற்றும் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் தலைமையில் ராஜகிரியாவில் இன்று (20) மாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்குபற்றலுடன் கலந்துரையாடலை நடத்தினார்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களையும், அழைப்பாளர்களையும் முதலில் வரவேற்று கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். அவர்கள் பொது மக்களின் தொடர் சுகாதாரப் பாதுகாப்பு நிலை தொடர்பாக ஆராய்ந்தனர். பொது மக்களின் நலனுக்காக பொது சுகாதார விதிகளை சட்டப்பூர்வமாக்குவது, எதிர்காலத்தில் ஆரோக்கியமான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான மாற்று வழி பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

நீடிக்கும் அபாய நிலைமைகள், பி.ஆர்.சி பரிசோதனைகள், வெளிநாட்டினரின் வருகை, தொடர்ச்சியான கட்டுபடுத்தல் பணிகளின் முன்னேற்றம், தனிமைப்படுத்தல் நடைமுறைகள், குணமடைந்த நோயாளிகளின் நகர்வுகளும் ஏனைய பகுதிகளின் முன்னேற்றங்களும் மற்றும் வானிலை பாதிப்புகள் போன்றவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. Sportswear Design | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ