Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2020 19:13:17 Hours

இராணுவ வீர்ர்களை இன்னல்களுக்கு உட்படுத்தும் அமைப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் - தேசிய படைவீரர்கள் நினைவு தின உரையில் ஜனாதிபதி

பலம் வாய்ந்த நாடுகள் தங்கள் படை வீரர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் அனுமதிக்காது . நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புகளை செய்த படைவீரர்கள் தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாக தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இத்தகைய அர்ப்பணிப்புகளை செய்துள்ள படைவீரர்களை பாதுகாப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் சர்வதேச அமைப்புக்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்றும் உறுதியாகக் கூறுகின்றேன் என சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (19) மாலை பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத் தூபி வளாகத்தில் நடைபெற்ற தேசிய படைவீரர்கள் நினைவு தின விழாவில் தெரிவித்தார்.

அங்கிகரிக்கப்பட்ட தகுதியுள்ள போர் வீரர்களை இழிவுபடுத்த முயற்சிப்பவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை ஒடுக்கி. எமது ஜனநாயக உரிமைகள் மற்றும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லக் கூடிய சுதந்திரத்தை மீட்டெடுத்தவர்களை பாதுகாப்பது நமது தேசிய கடமையாகும். அவர்களின் நியாயமான உரிமைகளுக்கு எதிராக செயல்பட யாரையும் அனுமதிக்க மாட்டேன். நாட்டிக்காக அவர்களின் உன்னத தியாகங்கள் மற்றும் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்குவேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

போர் ரோஜாக்களின் படுக்கை அல்ல நான் 20 ஆண்டுகள் இராணுவ அதிகாரியாகவும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பாதுகாப்பு செயலாளராகவும் ஒரு பிரஜை என்ற வகையிலும் அதன் துன்பங்களை நன்கு அறிவேன். ஜெனரல் கோபெகடுவ ஜெனரல் விஜய விமலரத்ன போன்று போர் வீரர்கள் இந் நாட்டின் பாதுகாப்பிற்காக மிகுந்த தியாகங்களைச் செய்தார்கள், அத்தகைய தியாகங்களை யாரும் ஒழிக்கவோ, இழிவுபடுத்தவோ யாரும் முயற்சிக்கக்கூடாது. தீவிரவாத சக்திகள் எப்போதும் இனம், மதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடுகளை பிளவுபடுத்த விரும்பும் அதிர்ஷ்டவசமாக இலங்கையில் ஒற்றையாட்சியில் ஒரே குடும்ப உறுப்பினர்களாக நாம் அனைவரும் நிம்மதியாக வாழ்கின்றோம்.

"எங்கள் போர் வீர்ர்கள் உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்போடு போரிட்டார்கள், நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பொருட்படுத்தாமல் பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான யுத்தத்தில் பெறுமதி வாய்ந்த வளங்கள் நாசமாக்கியது சாலைகளில், பேருந்துகள் அல்லது ரயில்களில் பல அப்பாவி உயிர்களை பறித்தது. பயங்கரவாதம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வளர்ச்சியை முற்றிலுமாக பாதித்தது. பௌத்த நற்பண்புகள், உணர்வுகள் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றால் நன்கு வளர்க்கப்பட்ட நாடு என்ற வகையில் மிக உயர் சட்டம் ஜனநாயக உரிமைகள் நிறைந்த ஒரு சமூகத்தை மீட்டெடுக்க முடிந்தது. அப்போதய ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், இன்று போன்று ஒரு நாளில், பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அனுபவிக்காத அந்த அமைதியை எங்களால் அடைய முடிந்தது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். Running Sneakers Store | Air Jordan