Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2020 17:49:08 Hours

இராணுவத் தளபதியின் தேசிய போர் வீரர்கள் தினம் தொடர்பான விஷேட செய்தி

எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்த மிகவும் போற்றப்பட்ட போர்வீரர்களில் ஒருவரான பாதுகாப்புத் தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் சிறப்பு செய்தியில், பயங்கரவாத தாக்குதலின் போது போர் வீரர்கள் வென்றது போன்று அர்ப்பணிப்புடன் எமது மண்ணிலிருந்து COVID-19 தொற்று நோயை ஒழிப்பதற்கு நாம் செயற்படவேண்டும்

முழு செய்தியை இங்கே படிக்க :

வீரமிகு முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை வீர்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களும் செய்த தியாகங்கள் ஊடாக கொடூரமாக சுடர்விட்ட பயங்கரவாதத்தினை அணைத்து நமது தாய் திருநாட்டில் நிலையான அமைதியைக் கொண்டுவந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த பெருமைமிகு வெற்றியின் 11 வது நிறைவை நினைவுகூறும் இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்புப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதியாக இச்செய்தியை வழங்க விரும்புகிறேன்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தேசத்தை பீடித்திருந்த எல்.டி.டி.ஈ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான உறுதியான அடித்தளமிட்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அப்போதைய ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷவின் இராஜதந்திரமும் தலைமைத்துவமும், அதேபோன்று அப்போதய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட மூலோபாய அணுகுமுறைகளையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியதில்லை, அதேபோல், அந்த இலக்கை அடைவதற்கு அனைத்து முப்படைகளின் தலைவர்கள் மற்றும் வீரமிகு நமது போர் வீரர்கள் செய்த இணையில்லா தியாகங்களை இந்த நேரத்தில் மரியாதையுடன் நினைவுக்கூற வேண்டும். மே 18, 2009 அன்று மூன்று தசாப்த கால மிலேச்சதனமான பயங்கரவாதத்தினை பொன்னான ஒரு தேசமாக எம்மால் முடிக்க முடிந்தது. இதற்கு மாபெரும் தரைப் படை கடற்படை, விமானப்படை , பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள வீர்ர்களின் முழு முயற்சிகள் மற்றும் ஏராளமான உயிர் தியாகங்கள் காரணமாக இருந்தன.

இந்த நிலையான அமைதியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களையும் கால்களையும் கைகால்களையும் தியாகம் செய்யும் துணிச்சல் மற்றும் வீர இராணுவப் போர் வீர்ர்கள் அமைதியை மீட்டெடுப்பதற்கும், தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், ஒற்றையாட்சி அந்தஸ்து மற்றும் தாய்நாட்டின் இறையாண்மையை பேணுவதற்கும் பங்களிப்பை வழங்கினர். இராணுவ நடவடிக்கைகளில், மிகவும் ஒழுக்கத்துடன் செயற்பட்டமை நினைவுகூரப்பட வேண்டிய உண்மை.

அதே நேரத்தில், பயங்கரவாதிகளுடனான போரின் தியாக வீர்ர் குடும்பங்களின் அன்பானவர்கள் காட்டிய உன்னத அர்ப்பணிப்பை மிக மரியாதையுடன் நினைவு கூர்கின்றேன். இதேபோல், இராணுவத்தில் உள்ள சிவில் ஊழியர்கள், தங்கள் உயிர் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல், தங்கள் பாத்திரங்களை மிகச் சிறந்த முறையில் செய்தார்கள் என்பதை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பின்னர் கடந்த தசாப்தத்தில், நமது தாய்நாட்டில் ஏற்பட்ட அனைத்து பேரழிவுகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியும் நிர்வகித்தும் உள்ளோம். அதே வேளையில் முக்கியமாக நாட்டின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஈர்க்கக்கூடிய வகையில் பங்களிப்பு செய்தோம். சரியான நேரத்தில் சவால்களை இணங்கண்டு தொழில்சார் முறையில் சிறந்து செயல்படுவதன் மூலம் அந்த இலக்குளை அடைந்தோம்.

இன்றைய நிலவரப்படி, ஒரு நாடாக நாம் புதிய சவாலை சமாளிக்க ஓய்வின்றி உழைத்து வருகிறோம். COVID-19 தொற்றுநோய் உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்திருந்தாலும், இந்த தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியமையால் நமது நாடு உலகின் மற்றய எல்லா நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் மேன்மைதாங்கிய ஜனாதிபதி, கௌரவ பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரால் வழங்கப்படும் தொலைநோக்கு திறனான வழிகாட்டல்கள் மிகவும் பாராட்டத்தக்கது. அதேபோல், இவ்வேளையில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியாகவும், இராணுவத் தளபதியாகவும், கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராகவும் கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் , கடற்படை வீரர்கள், விமான வீரர்கள் மற்றும் சுகாதார துறையினர்களிடம் கிடைத்த பேராதரவிற்கு நன்றி கூறுகின்றேன். குறிப்பாக, COVID-19 தொற்றுநோய் நம் நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்துவதில் தங்கள் வகைகூறல்களை சிறந்த வகையில் நிறைவேற்றிய இராணுவத்தின் அனைத்து துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் இந்த முக்கியமான தருணத்தில் எனது பாராட்டையும் கனிவான நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களை போன்று தற்போதும் நாடு எதிர்கொள்ளும் எந்தவொரு பேரழிவின் போதும் குடிமக்கள் சார்பாக தேசத்தின் பாதுகாவலர்கள் என்ற வகையில் இலங்கை இராணுவம் முன்னின்று செயற்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் தொடர்ந்தும் செயல்படுவோம். இந்த அபாயகரமான வைரஸ் பரவலை எதிர்த்து இரவு பகலாக இராணுவ வீரர்கள் தனது உயிர் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டமையை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இச்சவாலையை நாங்கள் முழுமையாக கட்டுப்பட்த்துவோம் என்று நம்புகிறேன்.

இந்த மண்ணிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவத்தின் வீர்ர்கள் என்ற வகையில், இராணுவம் துணிச்சலுடன் பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும். அதற்காக நீங்கள் எந்நேரத்திலும் வலிமையும், அதிர்ஷ்டமும், தைரியமும் நிறைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உயிர் நீத்த அனைத்து போர் வீரர் முத்தியடைய வேண்டும் என்று நான் பிராத்திக்கின்றோன். மேலும் இந்த முக்கியமான நினைவுகூரலில் போரில் காயமடைந்த அனைத்து போர் வீரர்களும் சுகம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

இறுதியாக, கொவிட்-19 வைரஸை ஒழித்து ஒரு தன்னிறைவு மற்றும் ஆரோக்கியமான தேசமாக உலக வரைபடத்தில் ஒரு முக்கிய தேசமாக வேண்டும் என்றும் இராணுவத்தின் அனைத்து படையினர்களுக்கும் தைரியமும் பலமும் முக்கியம் என்றும் மேலும் தெரிவித்துக் கொள்கின்றேன் (முற்றும்) Sportswear Design | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK