Header

Sri Lanka Army

Defender of the Nation

26th April 2020 01:21:15 Hours

இந்தியாவிலிருந்து மாணவர்கள் இலங்கைக்கு வருகை இராணுவ தளபதி தெரிவிப்பு

இராஜகிரியிலுள்ள கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு மையத்தின் (25) ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பாதுகாப்பு தலைமை சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, வழக்கறிஞ்சரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன போன்றோர் இணைந்து கொண்டனர்.

இந்த ஊடக சந்திப்பில் இராணுவ தளபதி கருத்து தெரிவிக்கையில் இந்தியா மும்பாயிலிருந்து இலங்கையைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று இம்மாதம் (25) ஆம் திகதி விமானம் மூலம் இலங்கைக்கு வந்தடைந்தனர். இவர்களை இலங்கையில் இராணுவத்தினரால் நிர்வாகிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இன்றைய தினம் (25) ஆம் திகதி புத்தளம் சாஹிரா கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த 82 பேர் தனிமைப்படுத்தப் பட்டதன் பின்பு தங்களது பரிசோதனைகளின் பின்பு சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாடு பூராகவுமுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 4485 பேர் விடுவிக்கப்பட்டதுடன் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 2910பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

இதன் வீடியோ கண்காட்சிகள் இணையதளத்தில் இணைக்கப்பட்டன. best shoes | NIKE AIR HUARACHE