Header

Sri Lanka Army

Defender of the Nation

20th November 2019 10:28:21 Hours

புதிதாய் பதவியுயர்த்தப்பட்ட இராணுவ உயரதிகாரிகள் 9 பேர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவியுயர்த்தப்பட்ட 9 இராணுவ உயரதிகாரிகள் இம் மாதம் (20) ஆம் திகதி இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் (20) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.

இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் J. C கமகே, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி K. N. S கொடுவேகொட, இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த புத்தள இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் K. J ஜயவீர, இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் K.H.P.P பெர்ணாண்டோ, இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் M. D விஜயசுந்தர, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த இராணுவ புலனாய்வு பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் A. S ஹேவாவிதாரன, இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் B. A. L ரத்னாயக,கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் S. S வடுகே, இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த விவசாய கால்நடை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் A. K. A. B குணரத்ன போன்ற அதிகாரிகள் இராணுவ தளபதியை சந்தித்தனர்.

இந்த உயரதிகாரிகளை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது பணிமனையில் வைத்து வரவேற்று இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இராணுவ வாள்களும் வழங்கி வைத்து கௌரவித்தார். trace affiliate link | Nike Air Max