Header

Sri Lanka Army

Defender of the Nation

21st November 2019 19:49:52 Hours

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் பதவியேற்பு

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் இலங்கையில் இடம் பெற்ற எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத தாக்குதலை ஒழிப்பதில் முக்கிய பங்களிப்பைச் வழங்கிய கஜபா படையணியை சேர்ந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ. டி. எச் கமல் குணரத்ன WWV RWP RSP USP ndc psc அவர்கள் (19) ஆம் திகதி காலை இராணுவ மரியாதைகளுக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சின் புதிய பாதுகாப்பு செயலாளராக பாதுகாப்பு அமைச்சில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு தலைமை அதிகாரி, முப்படை தளபதிகள், உதவி பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும், பதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இப் புதிய பாதுகாப்பு செயலாளர்ருக்கு நுழைவாயிலில் வழங்கப்பட்ட இராணுவ மரியாதையை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டது. மேலும் இவர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரினால் வரவேற்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டார். அன்றைய நாளின் பிரதம அதிதிக்கு கஜபா படையணியின் 48 படையினரால் இராணுவ முறைப்படி மரியாதை அணுவகுப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு செயலாளர் தனது அலுவலகத்தில் சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றினார்.

பின்னர், மங்களகரமான தருணத்தில் இடம்பெற்ற மகா சங்க உறுப்பினர்களின் செத் பிரித் வழிப்பாட்டினை தொடர்ந்து, புதிய செயலாளர் உத்தியோக பூர்வமாக தனது கையொப்பத்தினையிட்டு பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி 1981 இல் இராணுவத்தில் இணைக்கப்பட்டார். மற்றும் 1982 டிசம்பர் 4 ஆம் திகதி 2 ஆவது லெப்டின்னாக பதவியுயர்தப்பட்டார். அவர் ஒரு பிளாட்டூன் தளபதியாக தனது பணியினை தொடங்கியதுடன் ஒரு கட்டளை அதிகாரி, பதவி நிலை அதிகாரி 11, பொது நிர்வாக அதிகாரி 1, காலாட் படை பயிற்சி நிலையத்தின் தளபதி மற்றும் இராணுவ தலைமையங்களின் கூட்டு நடவடிக்கை பதவி நிலை அதிகாரி, 53,54 படைப் பிரிவுகளின் படைத் தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி, கஜபா படையணியின் கட்டளை தளபதியும் மற்றும் கஜபா படையணியின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் தளபதியும் மற்றும் வட கிழக்கு உட்பட ஏனைய இடங்களில் பல நியமனங்களை பெற்று திறம்பட சேவையாற்றியுள்ளார். அவர் சேவையில் இருந்து ஓய்வு பெறும் வரை 2015 பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் 2016 செப்டம்பர் 4ஆம் திகதி வரை இராணுவ தலைமையகத்தில் மாஸ்டர் ஜெனரல் போர்கருவி அதுகாரியாக கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிரேசிலின் துணைத் தூதராகவும் பணியாற்றினார்.

மேலும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் 2008 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம் பெற்ற மனிதபிமான யுத்தத்தின் போது தனது பங்களிப்பை முழுமையாக வழங்கினார். மேலும் வடமராட்ச்சி உட்பட ரிவிரெச ஜயசிக்குறி உட்பட பல இராணுவ நடவடிக்கைகளில் கலந்து கொண்டு திறம்பட செயலாற்றினார். மேலும் யுத்தத்தின் போது தான் பெற்றுக் கொண்ட அனுபவங்களை அடிப்படையாக வைத்து ‘நந்திக்கடல் வீதி மற்றும் கோட்டாபயவின் சுயசரிதை உள்ளிட்ட நூல்களையும் வெளியிட்டார். best shoes | balerínky