Header

Sri Lanka Army

Defender of the Nation

30th October 2019 14:04:04 Hours

இராணுவ தளபதி திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கு பாராட்டுக்கள்

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் விஷேட படையணியைச் சேர்ந்த வீரர்கள் பிரித்தானியாவிற்கு சென்று ‘கூட்டு ரோந்து பணி அப்பியாசத்தில் ஈடுபட்டு வெண்கல பதக்கங்களை பெற்று இலங்கை இராணுவத்திற்கு பெயரை பெற்றுத்தந்தனர்.

இவர்கள் இலங்கைக்கு வந்தடைந்து இம் மாதம் 28 ஆம் திகதி இன்று காலை இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் இந்த விஷேட படையணியின் படையினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் இவர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கி வைத்தார்.

விஷேட படையணியைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் ஏழு படை வீரர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 2-18 ஆம் திகதி வரை இந்த கூட்டு ரோந்து பணிகளில் பங்கேற்றிக் கொண்டு இந்த வெண்கல பதக்கங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த விஷேட படையணி மேஜர் ஜயந்த ரத்னாயக அவர்களது தலைமையில் இந்த கூட்டு அப்பியாசத்தில் பங்கேற்றிக் கொண்டது. விஷேட படையணியைச் சேர்ந்த இந்த அணியினர்களுக்கு நினைவு சின்னங்களை வழங்கி இராணுவ தளபதியவர்கள் கௌரவித்தார்.

அப்பியாச கூட்டுப் பணியில் விஷேட படையணியைச் சேர்ந்த மேஜர் R.M.J ரத்னாயக, கெப்டன் E.S.V.N ஜயசிங்க, லெப்டினன்ட் K.A.W.S களுபோவிலகே, சாஜன் N.W.G.K.W திசாநாயக, சாஜன் D.M.D.S திசாநாயக, கோப்ரல் H.P சமிந்த குமார, கோப்ரல் K.G.A.P மதுரங்க, லான்ஸ் கோப்ரல் I.M.N.P ஜயசேகர மற்றும் லான்ஸ் கோப்ரல் B.D.S மதுஷங்க பங்கேற்றுக் கொண்டனர்.

மேலும் இவர்களுடன் விஷேட படையணியின் பிரிக்கட் கொமாண்டர் கேர்ணல் சந்திமால் பீரிஸ் மற்றும் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் நிஷ்சங்க ஏரியகம இணைந்து கொண்டனர்.

அத்துடன் மூன்றாவது ஆசியா பரா வில்வித்தை போட்டியில் பங்கேற்றி தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்ட கோப்ரல் N.G.S பண்டார அவர்களையும் இராணுவ தளபதி பராட்டி நினைவு சின்னமொன்றையும் வழங்கி வைத்து கௌரவித்தார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ வில்வித்தை விளையாட்டு சங்கத்தின் தலைவர் கேர்ணல் நிஷ்சங்க ஏரியகமவும் இணைந்து கொண்டார். jordan Sneakers | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today