Header

Sri Lanka Army

Defenders of the Nation

logo logo logo

02nd September 2019 16:27:38 Hours

விடைபெற்றுச் செல்லும் முன்னாள் தொண்டர் படைத் தளபதிக்கு கௌரவ மரியாதை

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியாக இருந்து மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் இராணுவ பதவிநிலை பிரதானியாக பதவியேற்று செல்வதன் நிமித்தும் இவருக்கு ஆகஸ்ட் மாதம் (28) ஆம் திகதி தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தொண்டர் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த முன்னாள் படைத் தளபதியவர்களை தொண்டர் படையணியின் பிரதி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல் எப் கஸ்தூரியாரச்சி அவர்கள் வரவேற்றார்.

பின்னர் படைத் தளபதியவர்கள் தலைமையகத்திற்கு வருகை தந்து படையினர் மத்தியில் உரைகளை நிகழ்த்தினார். பின்னர் தலைமையகத்திலுள்ள அனைவரது பங்களிப்புடனும் குழுப்புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அகாரிகள், படையினர் இணைந்து கொண்டனர். அத்துடன் அன்றைய தினம் இவருக்கு தொண்டர் படையணி தலைமையக அதிகாரி விடுதியில் இரவு விருந்தோம்பலும் ஒழங்கு செய்யப்பட்டு இவரது சேவையை பாராட்டி நினைவு பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டன.