Header

Sri Lanka Army

Defender of the Nation

29th July 2019 20:34:11 Hours

கிளிநொச்சி படையினரால் முன்வைக்கப்பட்ட கண்காட்சிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 57, 65, 66, கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையணியைச் சேர்ந்த படையினரால் முன் வைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான கண்காட்சி இம் மாதம் (24) ஆம் திகதி கிளிநொச்சி “நெலும் பியச” கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த வருடாந்த கண்காட்சியில் 21 படை வீரர்களினால் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உபகரணங்கள் கண்காட்சிக்கு முன்வைக்கப்பட்டன.

கண்காட்சியில் முன் வைக்கப்பட்ட சிறந்த உபகரணங்களை தேர்ந்தெடுப்பதற்கான நடுவர்களாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணியகத்தின் உயரதிகாரி கேர்ணல் S.D உதயசேன, யாழ் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி பூபாலசுந்தரம் மற்றும் கலாநிதி P சசிகேஷ் போன்றோர் இணைந்து இப்போட்டியில் பங்கு பற்றிய வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

முதலாவது இடத்தை 9 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் J. M. S. M ஜயமஹாவும், இரண்டாவது இடத்தை 6 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த ரயிபல்மென் W. M மிலிந்தவும், மூன்றாவது இடத்தை 3 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் K. M. S. N பண்டார அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் படைத் தளபதிகள், தலைமையக கட்டளை தளபதிகள் இணைந்திருந்தனர். best Running shoes brand | New Releases Nike