Header

Sri Lanka Army

Defender of the Nation

19th July 2019 15:03:21 Hours

புதவிநிலைப் பிரதானியவர்களால் கொமாண்டோ படையினருக்கான டிஜிடல் போர் பயிற்சி அரங்கு வசதிகள் திறந்து வைப்பு

பாதுகாப்பு அமைச்சின் தேடுதல் மற்றும் அபிவிருத்தி மைத்தினால் நிர்மானிக்கப்பட்ட டிஜிடல் போர் பயிற்சி அரங்கானது இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ படைத் தலைமையகத்தினருக்காக கடந்த வியாழக் கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதன் தேவைக்காக இவ்வறாhன புதிய அரங்கானது நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கொமாண்டோ படையினரை ஊக்குவிக்கும் முறையில் நாட்டின் தேவைப்பாடுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை இலங்கை படைக் கலச் சிறப்பணியின் மேஜர் என் ஏ பி எம் எஸ் நிஷ்ஷங்க அவர்களால் நிகர்மானிப்பிற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆந்த வகையில் குறைந்த செலவில் இவ்வாறான டிஜிடல் போர் பயிற்சி அரங்கானது விசேடமாக கொமாண்டோ படையினரின் நடவடிக்கைப் பயிற்சிக்காக நிர்மானிக்கப்பட்டுள்ளது. இத் திட்டமானது தேடுதல் மற்றும் அபிவிருத்தி அமைச்சின் மற்றும் பணிப்பாளர் பிரிகேடியர் திரான் டி சில்வா அவர்களின் தலைமையில் கொமாண்டோ படைத் தலைமையக தளபதியான கேர்ணல் ஏ எஸ் பி சில்வா அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க முன்னெடுக்கப்பட்டுள்ளது. Authentic Nike Sneakers | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ