Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2019 15:24:16 Hours

ரோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் சூரிய சக்தி கருவிகள் வழங்கி வைப்பு

கொழும்பு ரோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 88 ஆவது பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 55 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 551 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதியும் ரோயல் கல்லூரியின் பழைய மாணவருமான கேர்ணல் அசங்க பெரேரா அவர்களினால் ஊர்காவற்துறையிலுள்ள அராலி நினைவு தூபி வளாகத்திற்கு மின் பாவனை நிமித்தம் சூரிய சக்தி கருவிகள் 17 ஆவது கெமுனு காலாட் படையணியினர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் சமீபத்தில் அராலி நினைவு தூபி வளாகத்தினுள் மின் தேவைகளை கண்டறிந்து இந்த சூரியசக்தி கருவிகள் இராணுவத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இம் மாதம் ஜூன் (10) ஆம் திகதி திங்கட் கிழமை 551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அசங்க பெரேரா அவர்களினால் 17 ஆவது கெமுனு காலாட் படையணியின் கட்டளை அதிகாரிக்கு இந்த சூரிய சக்தி கருவிகள் கையளிக்கப்பட்டன. Running Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp