Header

Sri Lanka Army

Defender of the Nation

18th December 2018 07:51:09 Hours

குறைந்த வருமானத்தைப் பெறும் 50 வறிய குடும்பங்களுக்கு நத்தார் பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு

எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால்; குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வுகள் யாழ் வாசவிலான் மத்திய கல்லூரியில் கடந்த சனிக் கிழமை(15) இடம் பெற்றது.

அந்த வகையில் குறைந்த வருமானத்தைப் பெறும் 50 வறிய குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றனவும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இப் பொருட்களுக்கான அனுசரனையை யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க நன்கொடையாளர்கள் வழங்கி வைத்துள்ளனர். இந் நிகழ்வில் படையினர் மற்றும் கிராம சேவகர்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியான பிரிகேடியர் ரசிக்க கருணாதிலக மற்றும் இப் படைத் தலைமையகத்தின் கேர்ணல் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சில்வெஸ்டர் பெரேரா மற்றும் பலர் கலந்து கொண்டு பரிசுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை(16) நத்தார் தின கரோல் கீதங்களும் யாழ் பாதுகாப்பு படையினரால் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நிலை நாட்டும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டது. latest Running Sneakers | Nike Shoes, Sneakers & Accessories