Header

Sri Lanka Army

Defender of the Nation

13th May 2018 22:43:59 Hours

யாழ் பிரதேசத்தின் வரிய குடும்பங்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் நன்கொடைகள்

மக்கள் மத்தியில் சகோதரத்துவம் ஆன்மீக மற்றும் மனிதனின் மதிப்பு பற்றி துன்பத்தை அனுபவித்த மக்களின் மனங்களுடன் பேசுவதற்கு அம் மக்களின் துயரங்களை போக்குவதற்கும் அருட் சகோதரர் சார்லஸ் தோமஸ் அவர்கள் மத உறுப்பினர்களின் ‘தஹாம் பஹன பதனம’ தஹாம் பஹன இசை மற்றும் ஆன்மீக திட்டத்தின் மூலம் யாழ் குடா நாட்டில் வாழ்வாதாரத்தை ஆற்றலை மேம்படுத்துவதற்காக 100 மிதிவண்டிகள் 7500 தென்னைக் கன்றுகள் 20 தையல் இயந்திரங்கள் 300 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் 20 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான சுகாதார வசதிகள் ஆகியவற்றை வழங்கினர்.

யாழ் பாதுகாப்பு படைத தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் ஏற்பாட்டின் இடம் பெற்ற இந்த நிகழ்வானது (10) ஆம் திகதி இலங்கை வேந்தன் கலா வித்தியாலய இடம் பெற்றதுடன் இப் பிரதேசத்தில் வரிய குடும்பத்திற்கு புதிய வீட்டைக் கட்ட (11) ஆம் திகதி வெள்ளிக் கிழமை அடிகல் நாட்டப்பட்டது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 300 மாணவர்களின் புலமை பரிசில்களுக்காக ஐந்து வருட ‘ரன் கெகுழு’ வங்கி கணக்குகளும் தொடங்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்காக 100 மிதி வண்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் தென்னை வளர்ப்பிற்காக 7500 கன்றுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

அதே போல் வருமை குடும்பத்தில் வாழும் 20 குடும் பெண்களுக்கு 20,000.00 பெருமதியான 20 தையல் இயந்திரங்கள் மற்றும் சுகாதார வசதிகள் வழங்குவதற்காக 20,000.00 நிதி உதிவி வழங்கப்பட்டது.

அதே போல் இரண்டாவது நாள் (11) இப் பிரதேசத்தில் அரசாங்க அதிகாரிகளினால் வரிய குடும்பத்திற்கு புதிய வீடு கட்ட அடிகல் நாட்டப்பட்டது.

இந் நிகழ்விற்கு மதத் தலைவர்கள், சகோதரர் சார்லஸ் தோமஸ், தஹாம் பஹன இசை அங்கத்தவர்கள், மற்றும் யாழ் பாதுகாப்பு படைத தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் 51 ஆவது படைப்பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரேஷான் செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் படையினர்கள், யாழ் பிரதேசத்தின் வரிய குடும்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பொதுமக்களும் நன்கொடைகள் பெற்றுக் கொள்வதற்கு கலந்து கொண்டார்கள்.

Sports brands | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp