Header

Sri Lanka Army

Defender of the Nation

29th March 2018 15:19:21 Hours

இராணுவ படையணிகளுக்கு இடையிலான மோட்டார் சைக்கிள் போட்டிகள்

இராணுவ மோட்டார் ரேசிங் அசோசியேஷன் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவத்தின் 2018 ஆம் ஆண்டின் ரைடிங் இண்டர் ரெஜிமெண்ட் போட்டிகள் அநுராதபுர சாலியபுர பிரதேசத்தில் (27) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.

இந்த ஓட்டப் போட்டியில் இலங்கை மின்சார பொறியியலாளர் படையணி முதலாவது இடத்தையும், இரண்டாவது இடத்தை விஜயபாகு காலாட் படையணியும் பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனராக இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டீ.கே புத்திக சில்வா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இபீப, இசப , இசிப, கப, விகாப, எசேப, இஇசேப, இபொப மற்றும் இமிபொப படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இப் போட்டிகள் இராணுவ மோட்டார் ரேசிங் அசோசிஷேன் நிறுவனத்தின் தலைமையில் (27) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மற்றும் இலங்கை இராணுவ மோட்டார் ரேசிங் அசோசியேஷன் சங்கத் தலைவர் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2 வது தடவையாக இந்த போட்டிகள் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் 40 மோட்டார் சைக்கிள் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு 21 ஆவது படைப் பிரவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து வெற்றீயீட்டிய வீர ர்களுக்கு பரிசினை வழங்கி வைத்தார்.

1980 ஆம் ஆண்டில் மகாவலி திட்டத்தின் கீழ் கொத்மலை மற்றும் ரண்டெம்பே அணைகளைக் கட்டியெழுப்ப வந்த ஜேர்மன் மற்றும் ஸ்வீட் பொறியாளர்கள் மோட்டார் பந்தயத்தில் பெரும் ஆர்வம் காட்டினர். 1981 ஆம் ஆண்டு கொத்மலை அணைக்கு அருகில் ஒரு ரேசிங் ட்ராக் கட்டப்பட்டது, பின்னர் பந்தய நிகழ்வுகள் இடம்பெற்றன.

Running sneakers | Sneakers