Header

Sri Lanka Army

Defender of the Nation

27th March 2018 17:29:55 Hours

யாழ்ப்பாண மாவட்ட செயலக நிர்வாக அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் உளவியல் அபிவிருத்தி சம்பந்தமான பட்டறை

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இலங்கை இராணுவ பயிற்ச்சி கட்டளை மற்றும் மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஒருங்கமைப்போடு யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிகாரிகளுக்கு ஆழுமை, தலைமைத்துவம் மற்றும் ஒழுக்க குணங்கள் "திறன் மேம்பாட்டு" விழிப்புணர்வு திட்டமானது மார்ச் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் 23அம் திகதி வரை ஐந்து நாள் பயிற்சி நடைபெற்றது.

யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களால் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் விடுத்த வேண்டுகோளின்படி இந்த வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்தார். சில வருடங்களுக்கு முன்னர் இராணுவ தளபதி யாழ் பாதுகாப் படைத் தளபதியா இருந்த சந்தர்ப்பத்தில் இந்த கருத்து பட்டறை நடாத்தப்பட்டது.

இந்த திட்டம் இராணுவ தளபதியின் சிந்தனை மற்றும் மத்திய பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தியத்தலாவையில் உள்ள இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையாளர்களினால் இரண்டாவது தடவையாக நடாத்தப்பட்டது.

அரசாங்க அதிகாரிகளின் திறமை, தொழில் அறிவு, திறமை மேம்பாடு மற்றும் தலைமைத்துவம் சரியான முடிவு, ஒத்துழைப்பு இயற்கை மற்றும் தவறான முடிவு மற்றும் பேரளிவின்போது இராணுவத்தின் அனுபவங்கள் இலங்கை இராணுவம் மற்றும் சிவில் அங்கத்தவர்களுக்கும் இடையில் ஒத்துமை ஏற்படுத்துவது எப்படி போன்ற ஒழுங்கமுறைக்கு கீழ் இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி பற்றரையில் 08 பெண் நிர்வாக அதிகாரிகளும் 25 அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

இந் நிகழ்வின் இறுதியில் தியதலாவையில் அமைந்துள்ள ஆதிஷம் ஆலயத்துக்கு சுற்றுலாவை மேற்கொண்ட அரசாங்க அதிகாரிகள் சம்பிரதாயத்தின் படி இரவு விருந்தோம்பலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந் நிகழ்வின் மத்திய பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் பிரதான விருந்தினராக கலந்து கொண்டார் யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் பெரியநாயகம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து பட்டறை முடிவில் இப்பயிற்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

url clone | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE