Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2017 19:08:22 Hours

வன்னி மற்றும் கிளிநொச்சி மூன்றாம் தவணை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் அனுசரனையுடன் 1000 இராணுவத்தினரது பங்களிப்புடன் சிரமதானம் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கி மூன்றாம் தவணை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் டெங்கு தடுப்பு வேலைத்திட்டம் ஆரம்பமானது.

இதே போல் வண்ணி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 61ஆவது படைப்பிரிவினரால் வவுனியா பிரதேசத்தில் 41பாடசாலைகளையும் உள்ளடக்கி டெங்கு தடுப்பு வேலைத்திட்டம் ஆரம்பமானது.

தற்பொழுது கிளிநொச்சி பிரதேசத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்களை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்த சிரமதானங்கள் கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57, 65 மற்றும் 66ஆவது படைப் பிரிவுகளின் பங்களிப்புடன் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதனைப் போல் 61ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 611, 612 மற்றும் 613ஆவது படைத் தலைமையகத்தினால் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயகவின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு வவுனியா கல்வி வலைய பணிப்பாளர் ஸ்ரீ ஸ்கந்தராஜா மற்றும் வவுனியா உதவி வைத்திய அதிகாரி ருக்ஷான் ஹெந்தலகேயின் ஒருங்கினைப்புடன் இடம்பெற்றது.

short url link | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ