Header

Sri Lanka Army

Defender of the Nation

24th August 2017 16:50:31 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி பதவியேற்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் புதிய கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை பதவி யேற்றுக்கொண்டார்.அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எழிமையான நிகழ்வின்போது தமது பதவியை பொறுப்பேற்றார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் தம்பத் பர்ணாந்து, இராணுவ உதவி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த வெற்றிடத்துக்கு புதிய கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு நியமிக்கப்பட்டார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த கட்டளை தளபதிக்கு 14 ஆவது சிங்க படையணியினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

சம்பிரதாய பூர்வமாக மங்கள விளக்கேற்றி புதிய கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, உத்தியோக பூர்வமாக தனது கடமையை ஆரம்பித்ததுடன் ஆவணங்கள் சிலவற்றுக்கும் கையொப்பமிட்டார்.

இதனை தொடர்ந்து முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளவில் மரம் ஒன்றையும் நற்றுவைத்து அவர், அங்கு குழுமியிருந்த படையினர் மத்தியில் உரையாற்றினார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்குரிய சுமார் 100 அதிகாரிகளும் 1000 படையினரும் கொண்ட படைத்தரப்பினர் மத்தியில் அவர் உரையாற்றினார்.

இங்கு உறையாற்றிய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு தனது எதிர்கால நோக்கு. எதிர்கால இலக்கு தொடர்பாக படையினருக்கு தௌிவு படுத்தினார். அதனையடுத்து சகல படைத்தரப்பினருடன் தேனீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாக பதவியேற்பதற்கு முன்னர் தம்புள்ளை 53ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியக பதவி வகித்தார்.

மேஜர் ஜெனரல் தம்பத் பர்ணாந்து, பாதுகாப்பு உதவி பதவி நிலை பிரதானியாக பதவியேற்பதற்காக முல்லைதீவு படையினருடன் பிரியாவிடை நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இராணுவ அதிகாரிகள் கட்டளை அதிகாரிகள் முன்நோக்கு நிர்வாக பாதுகாப்பு கட்டளை அதிகாரி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள், இராணுவ படையினர் உட்பட ஏனைய பதவி நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டன.

affiliate link trace | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD