Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd May 2024 18:30:20 Hours

பொது பணி பணிப்பாளர் நாயகம் மற்றும் உபகரண பணிப்பாளர் நாயகம் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

பதில் பொது பணி பணிப்பாளர் நாயகமும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ மற்றும் போர்கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏகே ராஜபக்‌ஷ ஆர்எஸ்பீ ஆகியோர் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை 2024 ஏப்ரல் 29 ம் திகதியன்று மேற்கொண்டனர்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிகளை யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அன்புடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பொது பணி பணிப்பாளர் நாயகம் மற்றும் உபகரண பணிப்பாளர் நாயகம் ஆகியோர் யாழ் தலைமையக மாநாட்டு மண்டபத்தில் மாநாட்டில் பங்கேற்றன, அங்கு கட்டளை அமைப்புகளில் நிலவும் மிக முக்கியமான நடைமுறை விடயங்கள் மற்றும் சிக்கல்கள் தொடர்டபாக கலந்துரையாடினர். பொது பணி பணிப்பாளர் நாயகம் மற்றும் உபகரண பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு யாழ் தளபதியினால் பாராட்டுச் சின்னமாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் மாநாடு நிறைவுற்றது.

அன்றைய நிகழ்ச்சிகளின் நிறைவின் பின்னர் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிகள் அதிதிகள் ஆவணத்தில் சில பாராட்டு குறிப்புகளை பதிவிட்டனர்.

இந்நிகழ்வில் 51 மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், யாழ் வழங்கல் தளபதி, 52 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி, பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.