Header

Sri Lanka Army

Defender of the Nation

24th April 2024 17:50:31 Hours

21 வது காலாட் படைப் ரிவில் புத்தாண்டு கொண்டாட்டம்

2024 ஏப்ரல் 21 கும்பிச்சாங்குளம் குளக்கட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடத்தில் 21 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் மங்கல விளக்கை ஏற்றி கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

பனிஸ் சாப்பிடுதல், தலையணை சண்டை, ரபான் அடித்தல், யானைக்கு கண் வைத்தல், கயிறு இழுத்தல், வினோத உடை, புத்தாண்டு அழகு ராணி மற்றும் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் அன்றைய நிகழ்வை வண்ணமயமாக்கியதுடன் அனைத்தும் பார்வையாளர்களையும் கவர்ந்தன.

நிகழ்வின் முடிவில், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு படைப்பிரிவின் தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பரிசுகள் மற்றும் வெற்றி கிண்ணங்களை வழங்கினர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அவர்களது துணைவியர், மற்றும் பிள்ளைகள் புத்தாண்டின் சம்பிரதாய மற்றும் கலாசார நிகழ்வுகளில் உற்சாகமாக கலந்துகொண்டனர்.