Header

Sri Lanka Army

Defender of the Nation

12th April 2024 16:50:05 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் புத்தாண்டு கொண்டாட்டம்

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய விழாவை 2024 ஏப்ரல் 08 ஆம் திகதி தலைமையக வளாகத்தில் சேவையாற்றும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பங்குபற்றுதலுடன் கொண்டாடியது.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் மற்றும் அவரது துணைவியார் திருமதி ஷம்மி ஜயவர்தன ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம் டி கே ஆர் சில்வா கேஎஸ்பீ மற்றும் அவரது துணைவியார் திருமதி.நெலும் டி சில்வா ஆகியோர் வரவேற்றனர்.

இவ் விழாவில் தென்னோலை பின்னல், தலையணை சண்டை, அழகு ராஜா மற்றும் அழகு ராணி தேர்வு யானைக்கு கண் வைத்தல், கயிறு இழுத்தல், வினோத உடை, இசை நாற்காலி மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுகள் அலங்கரித்தன.

இறுதியில், இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி உடன் இணைந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினார். இதேவேளை, இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் சேவையைப் பாராட்டி, நிகழ்வின் போது இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதியினால் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

‘திலு பிரிடல் ஹோம் மற்றும் பியுடி சலோன்’ நிறுவனத்தின் அனுசரணையில் அன்றைய ‘அழகு ராஜா மற்றும் அழகு ராணி தேர்வு நிறைவு பெற்றது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் ,சிப்பாய்கள் மற்றும் அனுசரனையாளர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.