Header

Sri Lanka Army

Defender of the Nation

05th April 2024 14:23:30 Hours

படையணிகளுக்கு இடையிலான நீச்சல் மற்றும் வோட்டர் போலோ சாம்பியன்ஷிப் - 2024

இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட படையணிகளுக்கு இடையிலான நீச்சல் மற்றும் வோட்டர் போலோ சாம்பியன்ஷிப் - 2024 போட்டி 2024 மார்ச் 29 முதல் 2024 ஏப்ரல் 03 வரை இலங்கை இராணுவ உடற்பயிற்சி பாடசாலை நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.எம். பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயமும் இராணுவ நீர் விளையாட்டுக் கழக தலைவருமான மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ.டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இராணுவத்தின் 14 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 259 போட்டியாளர்கள் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டனர். 8 அதிகாரிகளுடன் இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவரும் இப்போட்டியில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் போட்டியை கண்டுகளித்தனர். பரிசளிப்பு விழாவின் போது பின்வரும் தனிநபர் மற்றும் குழு நிகழ்ச்சிகள் பாராட்டப்பட்டன.

வேட்டர் போலோ ஆண்கள் திறந்த - சாம்பியன்: கஜபா படையணி

வோட்டர் போலோ ஆண்கள் திறந்த - இரண்டாம் இடம்: இலங்கை இராணுவ சேவை படையணி

வோட்டர் போலோ ஆண்கள் புதியவர் - சாம்பியன்: இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி

வோட்டர் போலோ ஆண்கள் புதியவர் - இரண்டாம் இடம்: இலங்கை சிங்க படையணி

நீச்சல் ஆண்கள் திறந்த- சாம்பியன்: கஜபா படையணி

நீச்சல் ஆண்கள் திறந்த - இரண்டாம் இடம்: இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

நீச்சல் ஆண்கள் புதியவர் - சாம்பியன்: இலங்கை பீரங்கி படையணி

நீச்சல் ஆண்கள் புதியவர் - இரண்டாம் இடம்: இலங்கை கவச வாகன படையணி

நீச்சல் மகளிர் திறந்த - சாம்பியன்: 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி

நீச்சல் மகளிர் திறந்த - இரண்டாம் இடம்: 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி

சிறந்த நீச்சல் வீரர்: லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.என். ரணதுங்க கஜபா படையணி

சிறந்த நீச்சல் வீராங்கனை திறந்த: சிப்பாய் டி.ஆர். மைல்ஸ் இலங்கை சமிக்ஞை படையணி

சிறந்த நீச்சல் வீரர்: புதியவர் சிப்பாய் எஸ்.டி.டி.எல். குமாரசிங்க இலங்கை கவசப் வாகன படையணி