Header

Sri Lanka Army

Defender of the Nation

05th April 2024 14:11:41 Hours

12 வது காலாட் படைப்பிரிவின் 13வது ஆண்டு நிறைவு விழா

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சீ.எஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 12 வது காலாட் படைப்பிரிவு அதன் 13வது ஆண்டு நிறைவு விழாவை 2024 ஏப்ரல் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் கொண்டாடியது.

ஆண்டு நிறைவு விழா பிரித் பாராயணங்களுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, படைப்பிரிவின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் பங்குபற்றிய நட்பு கிரிக்கெட் போட்டி 2024 ஏப்ரல் 01 ஆம் திகதி நடைபெற்றது.

மேலும், காஞ்சனதேவ சிறுவர் இல்லத்தின் சிறுவர்களை ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தை பார்வையிடுவதற்காக உல்லாசப் பயணமாக அழைத்துச் சென்றனர். உல்லாசப் பயணத்தின் போது, பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கியதுடன், அவர்களை மகிழ்விக்க கலிப்சோ இசைக்குழுவினால் இசை நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது.

ஆண்டு நிறைவு நாளில், 12 வது காலாட் படைப்பிரிவு தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். பின்னர், காலாட் படைப்பிரிவு தளபதி படையினருக்கு உரையாற்றினார்.

இறுதியாக, அனைத்து நிலையினருக்குமான மதிய உணவில் காலாட் படைப்பிரிவு தளபதி கலந்து கொண்டார். அங்கு அவர் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆண்டு நிறைவு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்