Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2024 14:54:09 Hours

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் செல்வபுரம் மற்றும் யோகபுரம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவினரால் சிமிக் பூங்காவில் 02 ஏப்ரல் 2024 அன்று யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. பகீரதன் மற்றும் திருமதி. பகீரதன் விழிபுணர்வு அமர்வு நடாத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் வரலாறு, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய இந்த அமர்வு செல்வபுரம் மற்றும் யோகபுரம் கிராமங்களில் வசிப்பவர்களை மேம்படுத்தும் நோக்கமாகக் கொண்டது. இந்த கலந்துரையாடல் அமர்வு பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் புரிதலுக்கு ஏற்ப மதிப்புமிக்க உந்துதலையும் அறிவையும் வழங்கியது.

இந்த திட்டத்தின் போது யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த திறமையான சிறுமிக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த விலைமதிப்பற்ற கல்வி அமர்வில் 51 வது காலாட் படைபிரிவின் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கிட்டத்தட்ட 400 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.