Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2024 19:42:58 Hours

லெபனான் ஐ.நா அமைதி காக்கும் பணிக்காக இலங்கையின் 15 வது குழு பயணம்

லெபனான் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கையின் 15 வது பாதுகாப்பு படை குழு 2024 ஏப்ரல் 03 ஆம் திகதி வாழ்த்துக்களுடன் லெபனான் புறப்பட்டது.

125 இராணுவ வீரர்கள் உள்ளடங்கிய 15 வது இலங்கை பாதுகாப்புப் படைக் குழுவில் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் அடங்குவர். விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன் கேணல் டி.கே.டி விதானகே ஆர்எஸ்பீ அவர்கள் குழுவின் கட்டளைத் தளபதியாகவும் இயந்திரவியல் காலாட் படையணியின் மேஜர் எச்.எம்.டபிள்யூ.சி பண்டார யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இரண்டாம் கட்டளை அதிகாரியாகவும் புறப்பட்டனர்.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி. அலுவிஹார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டப்ளியூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி. பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவத் தளபதியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் அவர்களை லெபனானுக்கு வழியனுப்பவும் அவர்களின் உறவினர்களுடன் விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

லெபனான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் தலைமையகத்திற்கு நகோரா மற்றும் லெபனான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் தேவைக்கேற்ப முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை வழங்க 15 வது இலங்கை பாதுகாப்புப் படைக் குழுவின் 12 இராணுவ வீரர்கள் முன்கூட்டியே 09 மார்ச் 2024 அன்று நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர்.