Header

Sri Lanka Army

Defender of the Nation

26th March 2024 19:32:14 Hours

பெண் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி எண் – 81 இன் விடுகை அணிவகுப்பு

பெண் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி இலக்கம் - 81 இன் விடுகை அணிவகுப்பு 2024 மார்ச் 22 ஆம் திகதி 6 வது களப் பீரங்கி படையணி அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை பீரங்கி படையணியின் ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையத்தில் 2023 செப்டெம்பர் 11 முதல் 2024 மார்ச் 22 வரை இந்த பாடநெறி நடைபெற்றது. இந்நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விடுகை அணிவகுப்பில் மொத்தம் 102 இராணுவ வீராங்கனைகள் பங்கேற்றதுடன், இலங்கை இராணுவ மருத்துவப் படையணியைச் சேர்ந்த கே.கே. ஜயரத்ன சிறந்த பெண் சிப்பாய் என்ற விருந்தையும், இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த என்.ஜி.எஸ்.எஸ். விஜேசிங்க சிறந்த உடற்தகுதிக்கான விருந்தையும், இலங்கை இராணுவ மருத்துவப் படையணியைச் சேர்ந்த ஜி.கே.டி செவ்வந்தி சிறந்த துப்பாக்கி சுடும் பெண் சிப்பாய் என்ற விருதையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.