Header

Sri Lanka Army

Defender of the Nation

25th March 2024 15:30:34 Hours

மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.எம் மனதுங்க (ஓய்வு) அவர்களுக்கு இறுதி இராணுவ மரியாதை

34 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.எம் மனதுங்க (ஓய்வு) அவர்களின் இராணுவ இறுதி மரியாதை 2024 மார்ச் 24 அன்று பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.

இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய படையினர் பூதவுடல் தாங்கிய பேழையினை பெற்று, தேசியக் கொடி போர்த்தி துப்பாக்கி வண்டியில் வைப்பதற்கு முன்பு மயானத்தின் நுழைவாயிலில் ஆயுத மரியாதை வழங்கினர்.

இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஸ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் பேழையினை முறையாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் அணிவகுத்து சென்றனர்.

இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட கட்டளை பகுதி I துக்கத்தில் இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய படையினர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தியதுடன், அடையாள துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது. இது ஒரு இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி ஆகும்.

இறுதி வாசிப்பின் சில நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாரி இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பலுடன் தேகம் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர், பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ அவர்களால் மறைந்த கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.எம் மனதுங்க (ஓய்வு) அவர்கள் பெற்றுக் கொண்ட பதகங்கள் மற்றும் அலங்காரங்களை அவரது குடும்ப அங்கத்தவர்களிடம் வழங்கப்பட்டன.

சிரேஸ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.எம் மானதுங்க (ஓய்வு) அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு கட்டளை 1 பின்வருமாறு;