Header

Sri Lanka Army

Defender of the Nation

21st March 2024 13:10:36 Hours

112 வது காலாட் பிரிகேடினால் பதுளை குடும்பங்களுக்கு சூரியசக்தி விளக்குகள் அன்பளிப்பு

பதுளை மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 112 வது காலாட் பிரிகேடினால் 5 சூரிய சக்தி விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சியை 2024 மார்ச் 10 ஆம் திகதி பிரிகேட் வளாகத்தில் நடாத்தினர்.

112 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூ.ஏ.ஜே. ஹேமச்சந்திர ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 'அதுரென்எலியட்ட' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அனுசரனையாளர்கள் குழு இந்த நன்கொடை திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியது.