Header

Sri Lanka Army

Defender of the Nation

19th March 2024 17:49:51 Hours

இராணுவத் தொண்டர் படையணி பிரதி தளபதி 2 வது (தொ) இராணுவ சேவைப் படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் 2024 மார்ச் 15 அன்று கட்டுநாயக்க 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியை 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்ஏ. உடரட்டகே அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் படையினரால் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி அவர்கள் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்ததுடன், படையினருக்கான உரையின் பின்னர் குழு படம் எடுத்து கொண்டார். மேலும், அவர் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தின் போது படையினர்களுடன் உரையாடிதுடன் அவர் புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டில் தனது பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.