Header

Sri Lanka Army

Defender of the Nation

18th March 2024 19:20:48 Hours

பதவி நிலை பிரதானி கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம்

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் நோயாளிகளின் நலன் மற்றும் வளாகத்தில் உள்ள நிர்வாகத் தேவைகள் குறித்து விசாரிக்கும் நோக்கத்துடன் கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு 18 மார்ச் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இலங்கை மருத்துவப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.சி பெர்னாண்டோ யூஎஸ்பீ, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.எம்.ஜி.பி. ரத்நாயக்க ஆர்எஸ்பீ மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ.எச்.யு.டி. விஜேரத்ன ஆகியோர் மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ மரபுகளின்படி பதவி நிலை பிரதானிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் நடத்திய விரிவான விளக்கக்கூட்டத்தில் பங்கேற்று, மருத்துவமனை வளாகத்திற்குச் சென்று நிர்வாக விடயங்களை ஆய்வு செய்தார். இதன் போது நோயாளிகளுடன் கலந்துரையாடி அவர்களின் உடல்நிலைகள் குறித்து கேட்டறிந்தார்.

இறுதியில், அவர் விருந்தினர் பதிவேட்டில் சில பாராட்டுக்களை பதிவிட்டார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.