Header

Sri Lanka Army

Defender of the Nation

18th March 2024 14:00:50 Hours

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி 611 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் படையினரின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் 611 வது காலாட் பிரிகேடிற்கு 13 மார்ச் 2024 அன்று விஜயம் செய்தார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை 611 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். தொடர்ந்து, நுழைவு வாயிலில் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், 611 வது காலாட் பிரிகேட் தளபதி அந்தந்த பகுதியின் பங்கு, பணிகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்தார்.

பின்னர் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்ததுடன், படையினருக்கு உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் நினைவுகளைச் சேர்க்கும் வகையில் படையினருடன் குழுப்படமும் எடுத்துக் கொண்டார்.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.ஜே.என். ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.