Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2024 13:29:15 Hours

கஜபா சூப்பர் குரோஸ் ஐஸ் பிரேக் - 2024 பார்வையாளர்களுக்கு குதூகலம்

இலங்கை ஒட்டோ ஸ்போர்ட்ஸ் சாரதிகள் சங்கத்துடன் இணைந்து கஜபா படையணி தலைமையகம் ஏற்பாடு செய்த 'கஜபா சூப்பர் குராஸ் ஐஸ் பிரேக் - 2024' ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 03) சாலியபுர கஜபா படையணி தலைமையக பந்தயப் பாதையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ, கஜபா படையணி நிலையதளபதி பிரிகேடியர் டப்ளியூஎம்ஏபி விஜேகோன் யூஎஸ்பீ என்டிசி மற்றும் ஒட்டோ ஸ்போர்ட்ஸ் சாரதிகள் சங்க அதிகாரிகளும் இணைந்து பிரதம அதிதியை வரவேற்றனர்.

வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானதுடன் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் முதலாவது பந்தய நிகழ்வை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். ரஜரட்டையில் முக்கிய ஈர்ப்பாக அறியப்படும் 'கஜபா சூப்பர் குரோஸ் ஐஸ் பிரேக் - 2024' 12 கார் பந்தயங்களும் 10 மோட்டார் சைக்கிள் பந்தயங்களும் இடம்பெற்றன.

இந்த சூப்பர் குரோஸ் நிகழ்வு இலங்கையின் மோட்டார் பந்தய நாட்காட்டியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறதுடன் மோட்டார் பந்தய ஆர்வலர்களின் ஆதரவைப் பெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஓட்டுநர்கள் தங்களது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

'கஜபா சூப்பர் குரோஸ் ஐஸ் பிரேக் - 2024' ஒரு காட்சியாக மட்டுமல்லாமல், ஒரு உன்னத நோக்கத்திற்கும் உதவுகிறது. இது படையணி தலைமையகத்தின் உற்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி திரட்டுவதுடன் இராணுவ வீரர்கள் மற்றும் மறைந்த கஜபா போர் வீரர்களின் குடும்பங்களின் நலனை ஆதரிக்கிறது.

நிகழ்வின் நிறைவில், இராணுவத் தளபதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், ஒட்டோ ஸ்போர்ட்ஸ் சாரதிகள் சங்க அதிகாரிகள் வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மோட்டார் பந்தய ரசிகர்கள் இந் நிகழ்வை கண்டுகளித்தனர்.