8th May 2025
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் வெளிச்செல்லும் தளபதி பிரிகேடியர் ஆர்பீ முனிபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு தியதலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை 2025 மே 07 ஆம் திகதி பிரியாவிடை வழங்கியது.
இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வெளிச்செல்லும் தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, படையினருக்கு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் படையினரால் அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.