இராணுவத்தினரால் தலதா புனித தந்த தாது கண்காட்சி பக்தர்களுக்கு வசதிகள் ஏற்பாடு

இலங்கை இராணுவம் ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கு தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் தனது அர்ப்பணிப்பு மிக்க ஆதரவைத் வருடாந்தம் தொடர்ந்தும் வழங்கி வருகிறது. ஸ்ரீ தலதா மாலிகை நிருவாக சபையுடன் இணைந்து, இலங்கை இராணுவத்தினர் பக்தர்களுக்கு இலவச உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்குவதற்காக ஏற்பாடுகளை செய்துள்ளனர். இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஒரு நாளைக்கு 5,000 பக்தர்களுக்கு தேனீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும், இலங்கை படையினர், பொலிஸாருடன் இணைந்து பக்தர்களை நிர்வகித்து, புனித வளாகம் முழுவதும் பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.

மேலும், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு படையினர் சிறப்பு உதவிகளை வழங்குகின்றார்கள். இதனால் அவர்கள் கண்ணியத்துடனும் எளிதாகவும் மத அனுஷ்டானங்களில் பங்கேற்க முடிகின்றது.

நிகழ்விற்கு ஆன்மீக பரிமாணத்தை சேர்க்கும் வகையில் படையினரால் பக்தி கீதங்கள் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஏப்ரல் 19 ஆம் திகதி புனித தந்த தாதுக்கு வழிபாடு செலுத்துவதற்காக கூடியிருந்த ஏராளமான பக்தர்களால் ஏற்பட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், இலங்கை இராணுவம் 24 மணி நேரத்திற்குள் ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து வெளியேறுவதற்காக ஒரு பாதையை உடனடியாக அமைத்தது. இந்த முயற்சி, புனித யாத்திரையை முடிக்கும் பக்தர்களுக்கு இலகுவாக வெளிச்செல்லவும், வளாகத்திற்குள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்கிரிய விஹாரையால் வழங்கப்பட்ட 5000 சீனிசம்பல் பான் பொதிகள், ஏராளமான நன்கொடையாளர்களின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட 39,200 உணவு பார்சல்கள் மற்றும் 4,000 தண்ணீர் போத்தல்களையும் பக்தர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் இலங்கை இராணுவப் படையினர் 2025 ஏப்ரல் 20 ஆம் திகதியும் தங்கள் ஆதரவை தொடர்ந்தனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், புனித தந்த தாது வழிபாட்டு பயணம் தொடர்ந்து நான்காவது நாளாக வெற்றிகரமாக தொடர்கிறது. புனித தந்த தாதுவை வணங்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் பொறுப்புகளை இலங்கை இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதனடிப்படையில், புனித நினைவுச் சின்னத்தை வழிபட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, குறிப்பாக பல்வேறு வயதுடைய நபர்களுக்கு, அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, இலங்கை இராணுவ மருத்துவ படையணி நடமாடும் மருத்துவ குழுக்களை நிறுத்தியுள்ளது.

இந்த திட்டம் அனைத்து வரிசைகளையும் உள்ளடக்கும் வகையில் செயல்படுத்தப்படுவதுடன், ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள விஷேட மருத்துவ நிலையங்களுடன் ஒருங்கிணைந்து, தேவைப்படும்போது ஆம்புலன்ஸ் உதவியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சிறப்புத் தேவையுடைய பக்தர்களின் பயன்பாட்டிற்காக இன்று (ஏப்ரல் 21) முதல் ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்குள் 50 சக்கர நாற்காலிகளுடன் 50 இராணுவ வீரர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழு புனித தந்த தாது ஆலயத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினர், நன்கொடையாளர்களின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட 29,280 உணவு பார்சல்களையும் அன்னதான மண்டபத்தில் 10000 பக்தர்களுக்கு உணவு பரிமாற்றியதன் மூலம் தங்கள் அர்ப்பணிப்புமிக்க ஆதரவை 2025 ஏப்ரல் 22 ஆம் திகதியும் தொடர்ந்தனர்.

Army Troops Distribute Meals and Assist Pilgrims During Sacred Relic Exposition

Army Continues Support to Devotees for Fourth Consecutive Day

Army Troops Facilitate Pilgrims During Exposition of Sacred Tooth Relic on 20th April 2025

Army Troops Facilitate Pilgrims During Exposition of Sacred Tooth Relic on 19th April 2025

Sri Lanka Army Supports Sri Dalada Maligawa Pilgrimage with Devotion and Service