கொழும்பு இராணுவ மருத்துவமனையின் 11 வது ஆண்டு நிறைவு விழா

கொழும்பு இராணுவ மருத்துவமனையின் 11 வது ஆண்டு நிறைவை 2025 மே 03 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு இராணுவ மருத்துவமனையின் பணிப்பாளர் பிரிகேடியர் டிகேஎஸ்எஸ் தொடங்கொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கொண்டாடியது.

ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, கங்கோடவில ஸ்ரீ பன்னியாராமய மற்றும் காலி சைத்யாலங்கார மகா விகாரையின் தலைமை விகாராதிபதியும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌத்த ஆய்வுகள் துறைத் தலைவருமான வண. மதிகே சுகதசிறி தேரர் அவர்களால் சிறப்பு தர்ம பிரசங்கம் நடாத்தப்பட்டது.

மறுநாள், மகா சங்கத்தினர் 25 பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.