இராணுவத் தலைமையகத்தின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் – 2025

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக, 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் இராணுவத் தலைமையகம் பாரம்பரிய புத்தாண்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களுடன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

இராணுவத் தளபதி மற்றும் ஏனைய அழைப்பாளர்கள், வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய கிராமத்து இல்லத்தில் (கெமி கெதர) மங்கல விளக்கு ஏற்றினர். தொடர்ந்து, பிரதம அதிதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வளாகத்தில் உள்ள பாரம்பரிய கிராம சூழ்நிலை நினைவாக உருவாக்கப்பட்டிருந்த இடங்களைச் சுற்றிப் பார்வையிட்டனர்.

மேலும் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கை விளையாட்டுகள் பாரம்பரிய அழகியல் நிகழ்வுகள் கொண்டாட்டங்களுக்கு வண்ணத்தையும் உற்சாகத்தையும் சேர்த்தன. மேலும், பாரம்பரிய அங்கம்பொர தற்காப்புக் கலையின் கண்காட்சி ஒரு சுருக்கமான அறிமுகத்துடன் இடம்பெற்றது.

இறுதியில், இராணுவத் தளபதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கிண்ணங்களை வழங்கினர். விரு கெகுலு பாலர் பாடசாலை பிள்ளைகள் மற்றும் கலந்து கொண்ட அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் தளபதி வழங்கினார்.

இந்த நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, முதன்மை பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.