18th May 2026
2026 மே 18 ஆம் திகதி ஏற்பட்ட கனமழையால் துண்டிக்கப்பட்டிருந்த கலஹா மருத்துவமனை மற்றும் கலஹா நகரத்திற்கான அணுகலை மீண்டும் ஏற்படுத்துவதற்காக, 6 வது களப் பொறியியல் படையணியின் படையினர் கலஹா –தெல்தொவத்த 100 பாலத்தை வெற்றிகரமாக சீரமைத்தனர்.
இந்த அவசர நிலைக்குப் பதிலளிக்கும் விதமாக, மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள நகரப் பகுதிகளுக்கான அணுகலை மீண்டும் ஏற்படுத்துவதற்காக, மெதவல பாலத்தை கலஹா பகுதிக்கு இடமாற்றம் செய்ய வீதி அபிவிருத்தி அதிகாரபை திட்டமிட்டது. தற்காலிக பாலம் நிறுவும் பணி வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அந்தப் பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது.